இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரதசப்தமி(19.2.'21)

படம்
அனைவருக்கும் வணக்கம். நான் கோயில் நகரமான குடந்தையில் வசிக்கிறேன்.என் முதல் பதிவாக ரதசப்தமி பற்றிய கட்டுரையைப் பகிர்ந்து கொள்கிறேன்.   #ரதசப்தமி இன்று ரதசப்தமி புண்யதினம். தை மாத அமாவாசைக்கு அடுத்த ஏழாவது நாளில் ரதசப்தமி  கொண்டாடப்படுகிறது. சூரிய பகவான் ஏழு குதிரைகள்  பூட்டிய தனது ரதத்தை வடகிழக்கு திசையில் திருப்பி பயணிப்பதாக கருதப்படுகிறது. மேலும், இந்த நாள் சூரியக் கடவுளின் பிறந்த நாளாகவும் கொண்டாடப் படுகிறது. சூரியன் தன் தென்திசைப் பயணத்தை  முடித்துக்கொண்டு ரதசப்தமியன்று வடக்கு நோக்கி பயணப்படும் தினமே ரத சப்தமி ஆகும். இது  வசந்த காலத்தின் ஆரம்பமாகவும், அறுவடை காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது.  விவசாயிகளுக்கு இந்த நாள் ஒரு புதிய ஆண்டின் தொடக்கமாகும். சூரியனின் தேரோட்டி அருணன்.  சூரியனின் தேரில் உள்ள ஏழு குதிரைகள் ஏழு வண்ணங்களைக் கொண்ட  வானவில்லைக் குறிப்பதாகவும், மற்றும் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது. ரதத்தில் உள்ள 12 சக்கரங்கள் பன்னிரெண்டு ராசிகளைக் குறிக்கின்றன.  சூரியனின் சொந்த வீடாக சிம்ம ராசி உள்ளது. சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் பயணித்து திரும