புறாக்கூண்டு வீடு
Wtwstories 2021F Februarystory2 Wtwகதைஎழுது புறாக்கூண்டு வீடு அன்று மதுரத்தின் மனம் பழைய நினைவுகளிலேயே நின்றது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்.. திருமணமாகி சுந்தரத்துடன் குடியேறியது செம்மேடு என்ற அந்த சின்ன கிராமத்தில். மாமியார், மாமனார், இரண்டு நாத்தனார்கள் என்று கூட்டுக் குடும்பம். காலை சூரிய உதயம் பார்த்து ஸ்லோகம் சொல்லி நமஸ்கரித்து வேலை ஆரம்பித்தால் தூங்கவும் நேரம் இருக்காது. சுந்தரத்துக்கு சென்னையில் வேலை. இவளால் அவன் சம்பளத்தில் தனிக் குடித்தனம் செய்ய முடியாதென்பதால் இவள் வாசம் புக்ககத்து மனிதர்களுடன். காலை சமையல் சாப்பாடு முடிந்ததும் அப்பளம் இடுவது ஊறுகாய் போடுவது என்று சிறிது கண் அயரவும் நேரமிருக்காது. கொல்லையில் மா ,எலுமிச்சை,நாரத்தை மரங்கள் இருந்ததால் ஜாடி ஜாடியாக ஊறுகாய்கள் ஊறிக் கொண்டிருக்கும்! சுந்தரம் வந்து விட்டால் வீட்டில் ஸ்பெஷல் சாப்பாடு! திரும்ப அவன் ஊருக்குப் போவதை அவளால் தாங்க முடியாது. ஆனால் அவன் சம்பளத்தில் தான் நாத்தனார்கள் திருமணம் முடிக்க வேண்டும். மாமனா ருக்கு போஸ்ட் ஆஃபீஸ் வேலை. அதிக சம்பளம் கிடையாது. அவன் திரும்பப் போனதும் மதுரம் அசோக