இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கல்யாணமே..வைபோகமே!

படம்
  கல்யாணம் என்றாலே அனைவருள்ளும் ஒரு மகிழ்ச்சி பெருகுவதை உணர முடியும். அது இளவயது திருமணமோ.. அறுபதாம் கல்யாணமோ.. பீமரதசாந்தியோ..சதாபிஷேகமோ...அதன் சந்தோஷம் தனிதான்! அதனை அந்த தம்பதிகள் மட்டுமன்றி அதனைக் காண வந்த அனைவரும் அனுபவிக்கலாம்!  அக்டோபர் 17ம் தேதி ஏகாதச ருத்ரஜபம், ஹோமமும் ,18ம் தேதி  எங்கள் பீமரத சாந்தியும்  (எழுபது வயது நிறைவு) நடைபெற்றது.  இதற்காக வந்திருந்த உறவினர்கள்  ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக பேசுவதும், சிரிப்பதும், ஜோக்கடிப்பதுமாக இருந்தபோது, உறவுகள் ஒருவருக்கொருவர் இணைந்து வாழவே இது போன்ற சம்பிரதாயங்களை நம் முன்னோர் வைத்திருப்பார்கள் போலும் என்று தோன்றுகிறது! நவராத்திரி முடிந்ததும் பீமரதசாந்தி இருந்ததால் வேலை மிக அதிகம். அதனாலேயே நான் அதிகம் எழுத முடியவில்லை. இத்துடன் சில புகைப்படங்களை இணைத்துள்ளேன். வயதில் பெரியவர்களுக்கு என் நமஸ்காரமும், இளையவர்களுக்கு வாழ்த்துக்களும்.

கணபதியே வருவாய்🙏🏼

படம்
 கணபதியே வருவாய்🙏🏼 நாளை  பிள்ளையார் சதுர்த்தி. பிள்ளையாருக்கு பல ஆலயங்கள் நம் நாடெங்கும் இருந்தாலும் மகாராஷ்டிரா அவருக்கு மிகப் பிடித்த இடம் என்று தோன்றும்படி பலப்பல ஆலயங்கள்..ஒவ்வொன்றும் தனித்தனி சிறப்பு. அவை பற்றி எழுத எண்ணியி ருந்தேன். நேரம் இல்லையாதலால் முடியவில்லை. இன்று தரிசிப்போம் மும்பை தாதரிலுள்ள முதல் தெய்வம் சித்தி வினாயகரை. ஸ்ரீகணபதி செல்வம் கொழிக்கும் மஹாராஷ்டிரத்தின் முதல் முக்கிய கடவுள். ஆவணி மாதம் வரும் விநாயக சதுர்த்தி இங்கு மிக மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். வீடுகளில் ஐந்து நாட்களும், ஆலயங்களில் பத்து நாட்களும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். கடைசி நாளன்று ‘கணபதி பப்பா மோரியா’ என்று விண்முட்டும் கோஷத்துடன் விசர்ஜன் செய்தபின் ஊரே மிக அமைதியாகி விட்டதான உணர்வு தோன்றும். மொத்தத்தில் இவ்வூர் மக்களின் செல்லப் பிள்ளையாக பிள்ளையார் விளங்குகிறார். இங்குள்ள விநாயகர் ஆலயங்கள் எண்ணிலடங்கா. ஒவ்வொன்றும் புகழும் பெருமையும், பிரசித்தமும் உடையவை. ‘அஷ்ட விநாயகத் தலங்கள்’ மிக முக்கியமானவை. மும்பை மற்றும் மும்பையைச் சுற்றியுள்ள பல விநாயகர் ஆலயங்களுக்கும் சிகரமாக விளங்குவது பிரபாதேவியில்