இடுகைகள்

Garden_to_table..1

படம்
#QHKInMyGarden2023 #Category1 #Garden_to_table என் வீட்டுத் தோட்டத்தில்...🌱🌿🍃 தோட்டமும் அதிலிருந்து கிடைக்கும் பூக்களும், காய்கறிகளும் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி தரும் விஷயங்கள். என் அப்பாவும், கணவரும் வங்கியில் பணிபுரிந்ததால் இரண்டு, மூன்று வருடத்திற்கொருமுறை மாற்றல். இதனால் பல ஊர்களில் படிக்கும், வாழும் வாய்ப்பு கிடைத்தாலும், நாங்கள் குடியிருந்த வீடுகளில் தோட்டத்திற்கு இடமிருக்காது. அடுக்குமாடி குடியிருப்பு வாசம் அலுத்துப் போய் தனி வீட்டில் வாழ ஏங்கிய சமயம் கிடைத்தது  இந்த புண்ய க்ஷேத்திரம் வீடு. தோட்டம் போடவென்றே அதிக இடம் வாங்கினோம். கத்தரி, வெண்டை, வாழை என்று பலவும் காய்த்து இங்கு குடியிருப்போருக்கும் கொடுத்து மகிழ்வோம். கருவேப்பிலை, ஓமவல்லி, கண்டதிப்பிலி, மின்ன இலை, மணத்தக்காளி கீரை, புதினா, , வெற்றிலை போன்ற மருத்துவ பயனுள்ள செடிகள் நிறைய.தென்னை மரங்களும் இருப்பதால் தேங்காய்த் தட்டுப்பாடு கிடையாது. இங்கு நான் செய்துள்ளவை என் தோட்டத்து செடிகளிலிருந்து ஃப்ரஷ்ஷாகப் பறித்து, சத்தாக செய்த கண்டதிப்பிலி இலை ரசம், மின்ன இலை மோர்க்குழம்பு, ஓமவல்லி துவையல், தேங்காய் பாயசம். கண்டதி

மார்கழியை வரவேற்போம்🙏🏼.9.1.'22..மார்கழி.25

படம்
  மார்கழியை வரவேற்போம்🙏🏼.9.1.'22..மார்கழி.25 மார்கழியில் நாம் தினமும் விடிகாலை  கோலம் போட்டு அதில் பூசணிப் பூவை வைக்கும் வழக்கம் உண்டு. அதன் காரணம் அறிவோமா! அக்காலத்தில், திருமணத் தரகர்களோ, மாப்பிள்ளை - பெண் தேவை என்பதற்காக வெளியிடப்படும் கல்யாண விளம்பரங்களோ கிடையாது. எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைப்பார்கள். எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டார்கள். மார்கழி மாத அதிகாலையில் வீதி பஜனையில் வருபவர்களின் பார்வையில் இந்தப் பூக்கள் தென்படும். விவரத்தைப் புரிந்து கொள்வார்கள்.  தை மாதம் பிறந்த உடனே பேசி, கல்யாணத்தை முடிப்பார்கள். இதன் காரணமாகவே மார்கழி மாதத்தில் வீட்டு வாயிலில் இருக்கும் கோலத்தில் பூக்களை வைத்தார்கள். இதன் பொருள் புரியாமல் தற்காலத்தில் எல்லா வீடுகளிலும் இதனைக் கடைப்பிடிக்கிறோம்! நேற்றைய கோலம்..Warli art rangoli நிவேதனம்..பயறு பொங்கல் இன்றைய கோலம்..Fusion rangoli நிவேதனம் அவல் ரவை காரப் பொங்கல்

மார்கழி மாதம் வந்தாச்சு...15.12.'21

படம்
  மார்கழி  ஆரம்பிக்கப்  போவதை  நினைக்கும்போதே  உடலும், மனமும் சிலுசிலுக்கிறது. மார்கழி  மாதப்  பனியும்,  குளிரும்,  விடிகாலையில்  கண்  விழிக்கும்போதே  எல்.  ஆர்.. ஈஸ்வரியின்  குரலில்  ஒலிக்கும்  மாரியம்மா,  காளியம்மா  பாடல்களும், , திருப்பாவை,     திருவெம்பாவைப்  பாடல்கள் இன்னும் நினைவில்! காலையில்  எழுந்து  பக்கத்து  வீட்டை  விடப்  பெரியதாகப்  போடும்  கோலமும் ,  அதை  அன்று  முழுதும்  நின்று  ரசிப்பதும்  இன்றைய   இளம்  பெண்களும்,  குழந்தைகளும்  அறியாத, அனுபவிக்காத    ஒன்று.  மார்கழி  பிறப்பதை  நினைக்கும்போதே  அந்த  நாட்களின்  ஞாபகம்  வந்து  நெஞ்சில்  நிற்கிறது.  இன்று  நாம்  வாழும்  ஃபிளாட்டுகளில் வாசலும்  இல்லை..கோலமும்  இல்லை..அதை    ரசிப்பவரும்  இல்லை. என்   திருமணத்திற்கு முன்பு . நான்கு  மணிக்கெல்லாம்  என் அம்மா 'எழுந்திரு.  மார்கழி மாதம்   விடிகாலையில் எழ  வேண்டும்.  வாசல்  எல்லாம்  தெளித்தாச்சு.  கோலம்  போடு'  என்பார்.  கண்கள்  இன்னும்  தூங்க  விரும்பினாலும்  கோல  ஆசை  தூக்கத்தை  விரட்டி  விடும். கோலத்தை  போட்டு  முடித்து  குளித்து,  பக்கத்திலிருந்த  கோவிலுக்கு  சென்று 

மார்கழியை வரவேற்போம்🙏🏼2.1.'22..மார்கழி.20

படம்
மார்கழியை வரவேற்போம்🙏🏼2.1.'22..மார்கழி.20 ஏறத்தாழ நூறு சபாக்களில் ஐநூறுக்கும்  அதிகமான  கர்நாடக இசைக்கலைஞர்கள் தங்களது இனிய குரல்களாலும், வாத்தியங்கள் மூலமும் இசை அமிர்தத்தை இன்பமாகப்  பொழிகிறார்கள். கடுங் குளிரிலும் இந்த இசைச் சாறலில் நனைய வெளிநாட்டிலிருந்து கூட அதிகம் பேர் இங்கு வருகிறார்கள். இசை ரசிகர்களின் விருப்பத்துக்கு இணங்க சபாக்கள்  இலவசமாகவும், கட்டணத்துடனும் காலை 11 மணிக்கே கச்சேரிகளைத் தொடங்குகின்றன.  இரவு 10 மணிவரை நீளும் இக்கச்சேரிகளை இடை விடாமல் ரசிகர்கள்  கேட்கும் விதத்தில் ஹரிகதை, வாத்தியம், வாய்ப்பாடு, பரதம், கதக், குச்சிபுடி, மோகினி யாட்டம் என கர்நாடக இசையின் அனைத்து வடிவங்களும் ரசிகர்களுக்கு  இசை விருந்தாக்கப் படுகின்றன.  இவற்றில் இந்துஸ்தானி இசை நிகழ்வுகளும் உண்டு. நாடகங்களும், இசை ஆராய்ச்சிக்குரிய விவாதங்களும் இந்த இசை விழாவில் அடக்கம். இசைவிழா உருவாக மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. நாளை.. இன்று கோலம்..புள்ளிக்கோலம் நிவேதனம்..பாதாம் பொங்கல்..வடை

அப்பாவுக்கு வணக்கம்🙏🏻..19.6.'22.

 #wtwstories2022 #fathersday #wtwகதைஎழுது அப்பாவுக்கு வணக்கம்🙏🏻 இந்தத் தந்தையர் தினத்தில் என் பிரியமுள்ள அப்பாவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களைக் கூறிக் கொள்கிறேன்.🙏 ஒரு தந்தையைப் பற்றிய எண்ணங்கள்... 6 வயதில் ... 'என் அப்பாவைப் போல கிடையாதாக்கும். அவர்தான் உலகமே...' 8 வயதில் ... 'என் அப்பாவுக்கு தெரியாதது எதுவும் இல்லை.அவருக்கு ஈடு இணை யாருமில்லை..' 10 வயதில்... 'என் அப்பா நல்லவர்தான்...ஆனாலும் அடிக்கடி கோபிக்கிறார்...' 15 வயதில்... 'என் சின்ன வயதில் அப்பா என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார்.இப்போ மாறிவிட்டார்..' 18 வயதில் ... 'இந்த நாளைக்கு ஏற்ற மாதிரி என் அப்பாவுக்கு நடந்து கொள்ளத் தெரியவில்லை. சரியான பழம்பஞ்சாங்கம்!...' 20 வயதில்... 'என் அப்பா ரொம்பவே மோசமாகிவிட்டார். எதையும் புரிந்து கொள்வதில்லை...' 23 வயதில்... 'சே!  அப்பாவின் செயல்,பேச்சு எதுவும் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அம்மா எப்படித்தான் இவருடன் இத்தனை நாளாக வாழ்கிறாளோ?' 25 வயதில்... 'வர வர அப்பாவுக்கு மூளையே சரியில்லையோ என்று தோன்றுகிறது. எது சொன்னாலும் எதிர்

அன்புள்ள அப்பா 🙏🏼..11.6.'22

 #wtwstories2022 #fathersday #wtwகதைஎழுது அன்புள்ள அப்பா 🙏🏼 அப்பா என்றதும் மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது? அப்பா-மகள் உறவு சற்று ஆழமானது... வித்யாசமான பாசம் கொண்டது!  இந்த வார்த்தையை சொல்லும்போதே மனம் சிலிர்க்கிறது..கண்கள் குளமாகிறது..!  முதல் குழந்தை பெண்தான் வேண்டும் என்று என் அப்பா ஆசைப்பட்டு பிறந்தவளாம் நான் என்று என் அம்மா சொல்வார். எனக்கு கீழே மூன்று தம்பிகள் இருந்தாலும் என் மீது ஒரு தனி பாசம் என் அப்பாவுக்கு என்பதை நான் பலமுறை உணர்ந்ததுண்டு. என் இரண்டு வயதிலிருந்தே மாலையில்  அலுவலகத்தி லிருந்து அப்பா எப்பொழுது வருவார் என்று வாசலிலேயே காத்திருப்பேனாம். அப்பாவும் பிஸ்கட் சாக்லேட் என்று ஏதாவது வாங்கி வருவாராம். அப்பா வந்ததும் அன்று நடந்ததெல்லாம் அவரிடம் சொல்லிவிட்டே அவரை உடை மாற்ற விடுவேனாம்! நான்கு வயது வரை வெளியில் சென்றால் அப்பாவை என்னைத் தூக்கி வரச் சொல்லி அடம் செய்வேனாம்!  நான் படிக்கும் நாட்களில் எனக்கு கணக்கில் சந்தேகம் வந்தால்(எனக்கு கணக்கு வராத பாடம்!) பொறுமையாக சொல்லித் தருவார். எனக்கு கல்லூரி சென்று படிக்க ஆசை இருந்தும் அப்பாவிற்கு இஷ்டமில்லாததால் அனுப்ப வில்லை.

அம்மாவுக்கு அர்ப்பணம்🙏🏻..8.3.'22

படம்
 அம்மாவுக்கு அர்ப்பணம்🙏🏻 அன்னையர் தினத்தில் என் அம்மாவின் நினைவுகள் கடிதமாக... அன்புள்ள அம்மா அநேக நமஸ்காரம். நலம்.நலமறிய அவா. இங்கு நான் உன் மாப்பிள்ளை பேரன் பேத்திகள் கொள்ளு பேரன் பேத்திகள் எல்லாரும் நலம்.நீ எப்படி இருக்கிறாய்? ஏன்மா..அப்பாவை விட்டு எந்த இடமும் போகாத நீ சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டாயே? பாவம்..அப்பா நீயில்லாமல் எட்டு வருடம் ரொம்பவே கஷ்டப்பட்டார். அப்பா வந்ததும் இப்போ சந்தோஷமாக இருப்பாயே! நான்  உன்னிடம் நேரில் பேச முடியாத விஷயங்களை இந்த கடிதத்தில் எழுதுகிறேன். நான் குழந்தையாய் இருந்தபோது சாப்பிட ரொம்ப படுத்துவேன் என்பாயே? உன் வேலை யெல்லாம் விட்டு எனக்கு சாதம் ஊட்டுவதற்குள் எவ்வளவு கஷ்டப்பட்டாயோ? இரவில் உன் புடவையைப் பிடித்துக் கொண்டு தூங்கும்போது தூக்கம் வராமல் அந்தப் புடவையை வாயில் கடித்து கிழித்து விடுவேன் என்று சொல்லியிருக்கிறாய். உனக்கு ரொம்பப் பிடித்து வாங்கிக் கொண்ட பட்டுப் புடவையை நான் கிழித்த போது ரொம்ப வருத்தப் பட்டாய் என்று சித்தி சொன்னார். நான் எவ்வளவு கஷ்டப் படுத்திருக்கேன் உன்னை. நிற்க..எனக்கு வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்தையும் காரணத்தோடு சொல்லிக் கொடுத