இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மார்கழியை வரவேற்போம்🙏🏼.9.1.'22..மார்கழி.25

படம்
  மார்கழியை வரவேற்போம்🙏🏼.9.1.'22..மார்கழி.25 மார்கழியில் நாம் தினமும் விடிகாலை  கோலம் போட்டு அதில் பூசணிப் பூவை வைக்கும் வழக்கம் உண்டு. அதன் காரணம் அறிவோமா! அக்காலத்தில், திருமணத் தரகர்களோ, மாப்பிள்ளை - பெண் தேவை என்பதற்காக வெளியிடப்படும் கல்யாண விளம்பரங்களோ கிடையாது. எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைப்பார்கள். எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டார்கள். மார்கழி மாத அதிகாலையில் வீதி பஜனையில் வருபவர்களின் பார்வையில் இந்தப் பூக்கள் தென்படும். விவரத்தைப் புரிந்து கொள்வார்கள்.  தை மாதம் பிறந்த உடனே பேசி, கல்யாணத்தை முடிப்பார்கள். இதன் காரணமாகவே மார்கழி மாதத்தில் வீட்டு வாயிலில் இருக்கும் கோலத்தில் பூக்களை வைத்தார்கள். இதன் பொருள் புரியாமல் தற்காலத்தில் எல்லா வீடுகளிலும் இதனைக் கடைப்பிடிக்கிறோம்! நேற்றைய கோலம்..Warli art rangoli நிவேதனம்..பயறு பொங்கல் இன்றைய கோலம்..Fusion rangoli நிவேதனம் அவல் ரவை காரப் பொங்கல்

மார்கழி மாதம் வந்தாச்சு...15.12.'21

படம்
  மார்கழி  ஆரம்பிக்கப்  போவதை  நினைக்கும்போதே  உடலும், மனமும் சிலுசிலுக்கிறது. மார்கழி  மாதப்  பனியும்,  குளிரும்,  விடிகாலையில்  கண்  விழிக்கும்போதே  எல்.  ஆர்.. ஈஸ்வரியின்  குரலில்  ஒலிக்கும்  மாரியம்மா,  காளியம்மா  பாடல்களும், , திருப்பாவை,     திருவெம்பாவைப்  பாடல்கள் இன்னும் நினைவில்! காலையில்  எழுந்து  பக்கத்து  வீட்டை  விடப்  பெரியதாகப்  போடும்  கோலமும் ,  அதை  அன்று  முழுதும்  நின்று  ரசிப்பதும்  இன்றைய   இளம்  பெண்களும்,  குழந்தைகளும்  அறியாத, அனுபவிக்காத    ஒன்று.  மார்கழி  பிறப்பதை  நினைக்கும்போதே  அந்த  நாட்களின்  ஞாபகம்  வந்து  நெஞ்சில்  நிற்கிறது.  இன்று  நாம்  வாழும்  ஃபிளாட்டுகளில் வாசலும்  இல்லை..கோலமும்  இல்லை..அதை    ரசிப்பவரும்  இல்லை. என்   திருமணத்திற்கு முன்பு . நான்கு  மணிக்கெல்லாம்  என் அம்மா 'எழுந்திரு.  மார்கழி மாதம்   விடிகாலையில் எழ  வேண்டும்.  வாசல்  எல்லாம்  தெளித்தாச்சு.  கோலம்  போடு'  என்பார்.  கண்கள்  இன்னும்  தூங்க  விரும்பினாலும்  கோல  ஆசை  தூக்கத்தை  விரட்டி  விடும். கோலத்தை  போட்டு  முடித்து  குளித்து,  பக்கத்திலிருந்த  கோவிலுக்கு  சென்று 

மார்கழியை வரவேற்போம்🙏🏼2.1.'22..மார்கழி.20

படம்
மார்கழியை வரவேற்போம்🙏🏼2.1.'22..மார்கழி.20 ஏறத்தாழ நூறு சபாக்களில் ஐநூறுக்கும்  அதிகமான  கர்நாடக இசைக்கலைஞர்கள் தங்களது இனிய குரல்களாலும், வாத்தியங்கள் மூலமும் இசை அமிர்தத்தை இன்பமாகப்  பொழிகிறார்கள். கடுங் குளிரிலும் இந்த இசைச் சாறலில் நனைய வெளிநாட்டிலிருந்து கூட அதிகம் பேர் இங்கு வருகிறார்கள். இசை ரசிகர்களின் விருப்பத்துக்கு இணங்க சபாக்கள்  இலவசமாகவும், கட்டணத்துடனும் காலை 11 மணிக்கே கச்சேரிகளைத் தொடங்குகின்றன.  இரவு 10 மணிவரை நீளும் இக்கச்சேரிகளை இடை விடாமல் ரசிகர்கள்  கேட்கும் விதத்தில் ஹரிகதை, வாத்தியம், வாய்ப்பாடு, பரதம், கதக், குச்சிபுடி, மோகினி யாட்டம் என கர்நாடக இசையின் அனைத்து வடிவங்களும் ரசிகர்களுக்கு  இசை விருந்தாக்கப் படுகின்றன.  இவற்றில் இந்துஸ்தானி இசை நிகழ்வுகளும் உண்டு. நாடகங்களும், இசை ஆராய்ச்சிக்குரிய விவாதங்களும் இந்த இசை விழாவில் அடக்கம். இசைவிழா உருவாக மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. நாளை.. இன்று கோலம்..புள்ளிக்கோலம் நிவேதனம்..பாதாம் பொங்கல்..வடை