இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிறந்தவீடு (சிறுகதை)(27.2.'21)

படம்
பிறந்தவீடு  கார் அந்த கிராமத்தில் நுழைந்ததுமே கிரீஷும் கீர்த்தனாவும் 'உன்னோட வீடு எங்கேம்மா இருக்கு' என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். கணபதி அக்ரஹாரம் அருகில் அழகான சிறு கிராமம்.  'இதோ இன்னும் கொஞ்ச தூரம்தான். போயிடலாம்' என்றான் சுரேஷ். சித்ராவின் மனம் அன்று அவளும், அவளுடன் பிறந்தவர்களும், சித்திகளின் குழந்தைகளுமாக ஆடிப் பாடி கூடி விளையாடிய நினைவுகளை அசை போட்டது. இது சித்ராவின் தாய்வழித் தாத்தா வீடு. அஞ்சல் நிலையத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய அவருக்கு மூன்று பெண்கள். ஒரே பிள்ளை. கோடை விடுமுறை ஆரம்பித்ததுமே மூன்று பெண்களின் குழந்தைகளும் இங்கு வந்து விடுவார்கள். தாத்தா வீட்டில் வண்டி இருந்ததால் அதில் ஏறி பக்கத்து ஊர்களைச் சுற்றி வருவார்கள். ஒரு மாதம் போவதே தெரியாது. சுரேஷ் சித்ராவின் மாமா பிள்ளை. சுரேஷின் தந்தை வெளியூரில் வங்கிப்பணியில் இருந்ததால் எல்லோரும் இணைந்து விளையாடிக் களிப்பது கோடை விடுமுறையில் மட்டுமே!  சுரேஷுக்கு சித்ரா என்று சிறு வயதிலேயே பெரியவர்கள் முடிவு செய்து இப்போது இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்க வாசம். ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் ஏதாவது விசேஷங்களுட

சிற்பியும் சிலைகளும்

படம்
  #Wtwகதைஎழுது #wtwstories2021 #April1 சிற்பியும் சிலைகளும் அந்த சிலைப் பூங்காவை சுற்றிப் பார்த்த சுகுமார் அந்த சிலைகளைச் செய்த சிற்பியைப் பற்றி விசாரித்தான். அவரது வீடு பூங்காவை அடுத்து  இருப்பதாக அலுவலகத்தில் சொன்னதைக் கேட்டு அங்கு சென்றான். அங்கு அறுபது வயதுக்கு மேலிருக்கும் வயதானவர் சிலைகளை உருவமைத்துக் கொண்டிருந்தார். "ஐயா வணக்கம்.நான் சுகுமார். ஒரு பத்திரிகையில் வேலை செய்கிறேன். இந்தப் பூங்காவின் சிலைகள் மிக அழகாக தத்ரூபமாக செதுக்கியுள்ளீர்கள். உங்களைப் பற்றி எங்கள் பத்திரிகையில் எழுதலாமா?" "எழுதிக்குங்க தம்பி. என்பேர் கதிரேசன். என்ன விபரம் வேணும்னு சொல்லுங்க தம்பி." "இது என்ன கடவுள்? ரொம்ப அழகா செஞ்சிருக்கீங்க." "அது சுவாமிமலை சுவாமிநாத சுவாமிப்பா. அப்பாவுக்கே பாடம் சொல்லிக் கொடுத்த பிள்ளை. அந்த ஊர் சிற்பக்கூட ம் ரொம்ப பிரசித்தம். அங்கிருந்த ஸ்தபதிகள் செஞ்ச கடவுள் சிலைகள் பல நாட்டு கோவில் கர்ப்பக்கிரகங்களில் இருக்கு. அங்க எங்கப்பா முருகேச ஸ்தபதி சிலை செதுக்க கத்துகிட்டு பல கோயில்களுக்கு சுவாமி சிலைகள் பண்ணிக் கொடுத்திருக்காரு." &

தனிமை தொலைந்தது..

படம்
  Wtwகதைஎழுது Wtwstories2021 April2 தனிமை தொலைந்தது..மாற்றம் வந்தது. "பாட்டி அங்க என்ன வேடிக்கை பார்க்கற. எனக்கு ரெண்டு கமர்கெட் கொடு" குமார் பாட்டியின் கவனத்தை கலைத்தான். "நான் என்னத்தைபார்க்கப் போறேன். என்னை மாதிரி அந்த ஒத்தக் குயில் அங்கன உக்காந்து தனியா பாடிக்கிட்டிருக்கேனு பாக்கறேன்" பக்கத்திலிருந்த பாரதி "ஏன் பாட்டி உனக்கு குடும்பம் குழந்தையெல்லாம் இல்லையா?" "எல்லாம் இருந்தது ஒரு காலத்தில. எங்க வீட்டுக்காரர் கரகாட்டம் ஆடுவாரு. நான் மயிலாட்டம் ஆடுவேன்" "நீ மயிலாட்டம் ஆடுவியா? வேடிக்கையா இருக்கு" "அந்த நாள்ள நான் அம்புட்டு அழகா இருப்பேனாக்கும். சரோஜாதேவி, பத்மினினெல்லாம் என்னைப் பாராட்டுவாங்க" "அட பாட்டிக்கு என்ன சந்தோஷம்" என்றான் குமார்! "மயிலாட்டம்னா எப்படி? மயில் தோகையை பின்னால கட்டிக்கிட்டு ஆடுவயா?" "உங்களுக்கெல்லாம் அதெல்லாம் எங்க தெரியப் போவுது? மயில் உடம்பு மாதிரி பெரிசா தோகையோட இருக்கும். அதை உடம்புல மாட்டிக்கிட்டு ஆடணும்" "ஐயோ ரொம்ப வெயிட்டா இருக்காதா?" என்றாள்