இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அப்பாவுக்கு வணக்கம்🙏🏻..19.6.'22.

 #wtwstories2022 #fathersday #wtwகதைஎழுது அப்பாவுக்கு வணக்கம்🙏🏻 இந்தத் தந்தையர் தினத்தில் என் பிரியமுள்ள அப்பாவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களைக் கூறிக் கொள்கிறேன்.🙏 ஒரு தந்தையைப் பற்றிய எண்ணங்கள்... 6 வயதில் ... 'என் அப்பாவைப் போல கிடையாதாக்கும். அவர்தான் உலகமே...' 8 வயதில் ... 'என் அப்பாவுக்கு தெரியாதது எதுவும் இல்லை.அவருக்கு ஈடு இணை யாருமில்லை..' 10 வயதில்... 'என் அப்பா நல்லவர்தான்...ஆனாலும் அடிக்கடி கோபிக்கிறார்...' 15 வயதில்... 'என் சின்ன வயதில் அப்பா என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார்.இப்போ மாறிவிட்டார்..' 18 வயதில் ... 'இந்த நாளைக்கு ஏற்ற மாதிரி என் அப்பாவுக்கு நடந்து கொள்ளத் தெரியவில்லை. சரியான பழம்பஞ்சாங்கம்!...' 20 வயதில்... 'என் அப்பா ரொம்பவே மோசமாகிவிட்டார். எதையும் புரிந்து கொள்வதில்லை...' 23 வயதில்... 'சே!  அப்பாவின் செயல்,பேச்சு எதுவும் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அம்மா எப்படித்தான் இவருடன் இத்தனை நாளாக வாழ்கிறாளோ?' 25 வயதில்... 'வர வர அப்பாவுக்கு மூளையே சரியில்லையோ என்று தோன்றுகிறது. எது சொன்னாலும் எதிர்

அன்புள்ள அப்பா 🙏🏼..11.6.'22

 #wtwstories2022 #fathersday #wtwகதைஎழுது அன்புள்ள அப்பா 🙏🏼 அப்பா என்றதும் மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது? அப்பா-மகள் உறவு சற்று ஆழமானது... வித்யாசமான பாசம் கொண்டது!  இந்த வார்த்தையை சொல்லும்போதே மனம் சிலிர்க்கிறது..கண்கள் குளமாகிறது..!  முதல் குழந்தை பெண்தான் வேண்டும் என்று என் அப்பா ஆசைப்பட்டு பிறந்தவளாம் நான் என்று என் அம்மா சொல்வார். எனக்கு கீழே மூன்று தம்பிகள் இருந்தாலும் என் மீது ஒரு தனி பாசம் என் அப்பாவுக்கு என்பதை நான் பலமுறை உணர்ந்ததுண்டு. என் இரண்டு வயதிலிருந்தே மாலையில்  அலுவலகத்தி லிருந்து அப்பா எப்பொழுது வருவார் என்று வாசலிலேயே காத்திருப்பேனாம். அப்பாவும் பிஸ்கட் சாக்லேட் என்று ஏதாவது வாங்கி வருவாராம். அப்பா வந்ததும் அன்று நடந்ததெல்லாம் அவரிடம் சொல்லிவிட்டே அவரை உடை மாற்ற விடுவேனாம்! நான்கு வயது வரை வெளியில் சென்றால் அப்பாவை என்னைத் தூக்கி வரச் சொல்லி அடம் செய்வேனாம்!  நான் படிக்கும் நாட்களில் எனக்கு கணக்கில் சந்தேகம் வந்தால்(எனக்கு கணக்கு வராத பாடம்!) பொறுமையாக சொல்லித் தருவார். எனக்கு கல்லூரி சென்று படிக்க ஆசை இருந்தும் அப்பாவிற்கு இஷ்டமில்லாததால் அனுப்ப வில்லை.

அம்மாவுக்கு அர்ப்பணம்🙏🏻..8.3.'22

படம்
 அம்மாவுக்கு அர்ப்பணம்🙏🏻 அன்னையர் தினத்தில் என் அம்மாவின் நினைவுகள் கடிதமாக... அன்புள்ள அம்மா அநேக நமஸ்காரம். நலம்.நலமறிய அவா. இங்கு நான் உன் மாப்பிள்ளை பேரன் பேத்திகள் கொள்ளு பேரன் பேத்திகள் எல்லாரும் நலம்.நீ எப்படி இருக்கிறாய்? ஏன்மா..அப்பாவை விட்டு எந்த இடமும் போகாத நீ சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டாயே? பாவம்..அப்பா நீயில்லாமல் எட்டு வருடம் ரொம்பவே கஷ்டப்பட்டார். அப்பா வந்ததும் இப்போ சந்தோஷமாக இருப்பாயே! நான்  உன்னிடம் நேரில் பேச முடியாத விஷயங்களை இந்த கடிதத்தில் எழுதுகிறேன். நான் குழந்தையாய் இருந்தபோது சாப்பிட ரொம்ப படுத்துவேன் என்பாயே? உன் வேலை யெல்லாம் விட்டு எனக்கு சாதம் ஊட்டுவதற்குள் எவ்வளவு கஷ்டப்பட்டாயோ? இரவில் உன் புடவையைப் பிடித்துக் கொண்டு தூங்கும்போது தூக்கம் வராமல் அந்தப் புடவையை வாயில் கடித்து கிழித்து விடுவேன் என்று சொல்லியிருக்கிறாய். உனக்கு ரொம்பப் பிடித்து வாங்கிக் கொண்ட பட்டுப் புடவையை நான் கிழித்த போது ரொம்ப வருத்தப் பட்டாய் என்று சித்தி சொன்னார். நான் எவ்வளவு கஷ்டப் படுத்திருக்கேன் உன்னை. நிற்க..எனக்கு வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்தையும் காரணத்தோடு சொல்லிக் கொடுத