பூரி ஜகந்நாதர்..2


பூரி ஆலயத்தின் மகிமை சொல்லில் அடங்காது. பிரமிப்பு ஏற்படுத்தும் அரண்மனை போன்று மகா பிரம்மாண்டமான ஆலயமாக அமைந்திருக்கிறது இது. கிழக்கே சிம்ம வாயில், மேற்கே வைராக்ய வாயில், வடக்கே யானை, தெற்கே குதிரை வாயில் என  நான்கு பெரிய வாயில்களைக் கொண்டது. இந்தக் கோயிலின் சுற்றுச் சுவர்களும் 713  அடி உயர கோபுரமும் ஒரிசாவின் மிகப் பெரிய கோபுரமாம். இது ராஜகோபுரம் இல்லை. மூலவரின் விமானமாகும்.இவ்வாலயம் 12ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனின் மகன் வயிற்று பேரன் சோடகங்கன் வம்சத்தாரால் உருவாக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. 


ஆலயத்தினுள்ளே கணபதி, சிவன், அம்பிகை, மகாலக்ஷ்மி, புவனேஸ்வரி, சூரியன் ஆகியோருக்கு என்று அத்தனை தெய்வங்களுக்குமாக பல சந்நிதிகள் இருக்கின்றன. ஆலயத்தை முழுதும் தரிசிக்கவே சுமார் இரண்டு மணி நேரம் ஆகிவிடுகிறது. இவ்வாலயத்தை ராமதாஸர், ஹரிதாஸ், துளசிதாசர், மீராபாய் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.


இங்கு ஜகந்நாதருக்கு தினமும் 64 வகை உபசாரங்கள் நடை

பெறுகின்றன.விதவிதமான அலங்காரங்களை செய்து பார்த்து மகிழ்கிறார்கள். 56 வகை  பிரசாதங்கள் செய்யப்படுகிறது.


இந்த ஆலயம் மிகப் பெரிய சமையலறை கொண்டது. 24 அடுப்புகளும், 600 சமையல்காரர்களும் ஒருங்கிணைந்து உணவு சமைப்பதைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சி! தினுசு தினுசாக பிரம்மாண்ட அளவில் தயாராகும் இந்தப் பிரசாதங்களை மஹா பிரசாதம் எனப் பெயரிட்டு அழைக்கின்றனர். 


இங்கு தினமும் ஒரே அளவு சமைத்தாலும்,எத்தனை பக்தர்கள் வந்தாலும் போதாமல் இருந்ததில்லையாம். அதுபோல் மீந்து போனதும் இல்லையாம்! 


மடப்பள்ளியில் இன்று வரை மண்பாத்திரங்களை உபயோகித்து விறகு அடுப்பிலேயே  சமைக்கின்றனர். அடுப்பை எரியவிட்டு ஏழு மண்பானைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து சமைப்பார்களாம். அதில் அதிசயம் என்னவெனில் கீழிருக்கும் பானை உணவு வேகுமுன் உச்சியிலுள்ள பானை உணவு வெந்து விடுமாம்!


கர்ப்பக் கிரகத்தில் ரத்தின சிம்மாசனத்தில்  ஆறடி உயரத்தில் வெள்ளை நிறத்தில் அண்ணன் பலராமன் , நடுவில் மஞ்சள் நிறத்தில் தங்கை சுபத்ரை,  கருமை நிறத்தில் ஸ்ரீ ஜகன்னாதர் காட்சியளிக்

கிறார்கள். இப்படி கண்கவர் அலங்காரத்தில் அம்மூவரின் காட்சி உலகுக்கு அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்துவதாகவே அமைந்திருக்கிறது.

தொடரும்..



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சார்தாம் யாத்ரா..14

சார்தாம் யாத்ரா..9

சார்தாம் யாத்ரா..13