கல்யாணமே..வைபோகமே!

 


கல்யாணம் என்றாலே அனைவருள்ளும் ஒரு மகிழ்ச்சி பெருகுவதை உணர முடியும். அது இளவயது திருமணமோ.. அறுபதாம் கல்யாணமோ..

பீமரதசாந்தியோ..சதாபிஷேகமோ...அதன் சந்தோஷம் தனிதான்! அதனை அந்த தம்பதிகள் மட்டுமன்றி அதனைக் காண வந்த அனைவரும் அனுபவிக்கலாம்! 


அக்டோபர் 17ம் தேதி ஏகாதச ருத்ரஜபம், ஹோமமும் ,18ம் தேதி  எங்கள் பீமரத சாந்தியும்  (எழுபது வயது நிறைவு) நடைபெற்றது. 


இதற்காக வந்திருந்த உறவினர்கள்  ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக பேசுவதும், சிரிப்பதும், ஜோக்கடிப்பதுமாக இருந்தபோது, உறவுகள் ஒருவருக்கொருவர் இணைந்து வாழவே இது போன்ற சம்பிரதாயங்களை நம் முன்னோர் வைத்திருப்பார்கள் போலும் என்று தோன்றுகிறது!


நவராத்திரி முடிந்ததும் பீமரதசாந்தி இருந்ததால் வேலை மிக அதிகம். அதனாலேயே நான் அதிகம் எழுத முடியவில்லை.


இத்துடன் சில புகைப்படங்களை இணைத்துள்ளேன். வயதில் பெரியவர்களுக்கு என் நமஸ்காரமும், இளையவர்களுக்கு வாழ்த்துக்களும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்புள்ள அப்பா 🙏🏼..11.6.'22

மேல்நாட்டு மருமகள்!

சார்தாம் யாத்ரா..9