இடுகைகள்

ஆகஸ்ட், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்றென்றும்வைரம்

படம்
#wtwகதைஎழுது #August2025  #கதை #அனுபவம் #Diamondsareforever  #என்றென்றும்வைரம்  என்றும் வைரம் நேரமில்லாததால் தாமதமான பதிவு🙏 வைரம் என்றதுமே நம் நினைவில் வருவது அதன் விலைமதிப்பும், பளபளப்பும், அதன் அழகுமே. வைர நகைகளை விரும்பாதவர் யார்! அதிலும் பெண்கள்!  குழந்தைகளை என் கண்ணே, மணியே, முத்தே, வைரமே என்று கொஞ்சுவோம். வலுவான உடலுள்ளவர்களைப் பார்த்து..சரியான வைரம் பாய்ந்த கட்டை என்போம்! இனி நம் தலைப்புக்கு வருவோம். வைரம் என்றதும் அதன் அழகோடு மதிப்பும் மிக அதிகம் என நாம் அறிவோம். வைரம்  என்பது கரி என்றால் நம்மால் நம்ப முடிவதில்லை. உறுதியான, சுத்தமான, ஒளி  ஊடுருவக்கூடிய கார்பன்தான் வைரமாகும். பல  ஆண்டுகளாக பூமிக்கடியில் இருந்து  உயிரியல், ரசாயன  மாற்றங்களால் கெட்டியாகிய கரி என்ற கார்பன் தான் வைரம் எனப்படும். வைரத்தின் ஆங்கிலப் பதமான ‘டைமண்ட்’ கிரேக்க வார்த்தையான ‘அடாமஸ்’ (வெல்ல முடியாதது)என்ற சொல்லிலிருந்து தோன்றியது. வைரம் என்பது அன்பு, அழகு, காதல், தெய்வீகம் இவற்றின் குறியீடாகும். 1868-ல் தென்ஆப்பிரிக்காவிலுள்ள ஆரஞ்சு நதிக்கரையில் ஒரு ஆடு மேய்க்கும்...