அப்பாவுக்கு வணக்கம்🙏🏻..19.6.'22.

 #wtwstories2022

#fathersday

#wtwகதைஎழுது

அப்பாவுக்கு வணக்கம்🙏🏻

இந்தத் தந்தையர் தினத்தில் என் பிரியமுள்ள அப்பாவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களைக் கூறிக் கொள்கிறேன்.🙏


ஒரு தந்தையைப் பற்றிய எண்ணங்கள்...

6 வயதில் ...

'என் அப்பாவைப் போல கிடையாதாக்கும். அவர்தான் உலகமே...'


8 வயதில் ...

'என் அப்பாவுக்கு தெரியாதது எதுவும் இல்லை.அவருக்கு ஈடு இணை யாருமில்லை..'


10 வயதில்...

'என் அப்பா நல்லவர்தான்...ஆனாலும் அடிக்கடி கோபிக்கிறார்...'


15 வயதில்...

'என் சின்ன வயதில் அப்பா என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார்.இப்போ மாறிவிட்டார்..'


18 வயதில் ...

'இந்த நாளைக்கு ஏற்ற மாதிரி என் அப்பாவுக்கு நடந்து கொள்ளத் தெரியவில்லை. சரியான பழம்பஞ்சாங்கம்!...'


20 வயதில்...

'என் அப்பா ரொம்பவே மோசமாகிவிட்டார். எதையும் புரிந்து கொள்வதில்லை...'


23 வயதில்...

'சே!  அப்பாவின் செயல்,பேச்சு எதுவும் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அம்மா எப்படித்தான் இவருடன் இத்தனை நாளாக வாழ்கிறாளோ?'


25 வயதில்...

'வர வர அப்பாவுக்கு மூளையே சரியில்லையோ என்று தோன்றுகிறது. எது சொன்னாலும் எதிர்மறையாகவே பேசுகிறார். உலகம் புரியாதவர்...'


30 வயதில்...

'ஹ்ம்ம்..என் மகன்/ள் நான் சொல்வதைக் கேட்பதேயில்லை. நான் சின்ன வயதில் என் அப்பாவுக்கு ரொம்பவே பயப்படுவேன்..'


40 வயதில்..

'என் அப்பா எங்களை மிக ஒழுக்கத்துடன் வளர்த்தார். அந்தப் புரியாத வயதில் அவர் எப்படி எங்களை மிகச் சரியாக வளர்த்தார் என்பது எனக்கு இன்னும் ஆச்சரியம்தான்!..'


50 வயதில்...

'நாங்கள் நான்கு சகோதர சகோதரிகள்..எங்களை வளர்க்க எங்கள் அப்பா ரொம்பவே கஷ்டப் பட்டதை நினைத்துக் கொள்கிறேன். எனக்கு ஒரு மகனை/ளையே இன்று வளர்ப்பது கடினமாக உள்ளது.'


55 வயதில்...

'என் அப்பா மிகவும் முன்யோசனையுடன்,திட்டமிட்டு எங்களை நல்ல விதமாக உருவாக்கினார். இன்றும் இந்த வயதிலும்,தன் வேலைகளைத் தானே செய்து கொள்வதோடு, எந்த கடினமான சூழ்நிலையையும் சமாளிக்கும் ஆற்றலுடன் இருக்கிறார். அது அவரின் மிகச் சிறந்த குணம்.

இன்று அவர் என்னுடன் இல்லையெனினும் அவரிடமிருந்து நான் கற்றவை பல. மொத்தத்தில் என் அப்பா மிக மிக அன்பானவர்...உயர்ந்தவர்...சிறந்தவர்...அவருக்கு நிகர் அவரே🙏


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

WTWFriendship

சார்தாம் யாத்ரா..14

சார்தாம் யாத்ரா..9