WTWFriendship
#WTW கதைஎழுது
#HappyBirthdayWTW
#wtwstories2021
#March2
#WTWFriendship
ஐந்தாவது பிறந்தநாள் காணும் WTW தளத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இந்த தளத்தில் நான் இணைவதற்குக் காரணமே தோழி பத்மா
LalithaPadmaBalasundaram என்பதை எப்படி மறந்தே போனேன்🤔 அவர்தான் என்னை இதில் இணைத்துவிட்டவர். அவர் மட்டுமே நான் நேரில் பார்த்து பேசி பழகிய தோழி!
நாங்கள் மூன்று வருடங்களுக்கு முன்பு திருச்சியில் எங்கள் நண்பர் ஒருவர் வீட்டு விசேஷம் ஒன்றில் சந்தித்தோம். அவர் டென்மார்க்கிலிருந்து அவர் அம்மா வீட்டிற்கு ஸ்ரீரங்கம் வந்திருந்தார். பார்த்த சிலமணி நேரத்திலேயே வெகுநாள் பழகியது போன்ற உணர்வு ஏற்பட்டது. மிக எளிமையானவர். இனிமையானவர்.
நாங்கள் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அது எனக்கு கிடைக்கவில்லை.
அதன்பின் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வப்போது வாட்ஸப்பில் பேசுவதோடு சரி. விரைவில் மீண்டும் சந்திப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக