என் இனிய தோழி!#WTW கதைஎழுது

#HappyBirthdayWTW

#wtwstories2021

#March2

#WTWSuperWoman


என் இனிய தோழி!

எனக்கு பள்ளி நாட்களில் தோழிகள் இருந்தாலும் படிப்பு முடிந்தபின் அந்தத் தோழமை தொடரவில்லை. 


திருமணத்திற்குப் பின் மொழி தெரியாத வெளி மாநில வாசத்தில் நட்புக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை! 


என் கணவருக்கு வங்கியில் அடிக்கடி  வரும் வேலை மாற்றங்களால் பல ஊர்களில்  சில சிநேகிதிகள்கிடைத்

தாலும், அடுத்த ஊருக்குச் செல்லும்போது,  அந்த சிநேகம் சில நாட்களிலேயே கடிதத் 

தொடர்புடன் துண்டித்துப் போகும்.


பணத்தை எளிதில் சம்பாதித்து விடலாம், ஆனால் நண்பர்களை சம்பாதிப்பது கடினம். வாழ் நாளில் நாம் பலருடன் பழகினாலும் யாராவது ஒருவர் மட்டுமே உள்ளார்ந்த, ஆழ்ந்த நட்புடன் இருக்க முடியும்.

 

நாங்கள் ஈரோட்டில் இருந்த சமயம் என் மகனுடன் படித்த மாணவனின் தாயாக  அறிமுகமான என் தோழி முத்துலட்சுமியின் ஆழமான, அழுத்தமான நட்பு, 30 ஆண்டு

களுக்கும் மேலாகத் தொடர்கிறது.


எங்கள் எண்ணங்கள், ரசனைகள், அபிப்பிராயங்கள் ஒரே அலைவரிசையில் இருந்தது. நான்கு வருடங்களுக்குப் பிறகு ஈரோட்டை விட்டு மாற்றலாகி நாங்கள் கிளம்பியபோது, பிரிவு தாங்காமல் இருவருமே கண்கலங்கி விட்டோம். அன்று முதல் இன்று வரை தொலைபேசி, ஈமெயில், கடிதங்கள்தான் எங்கள் நட்பிற்குப் பாலம்!


எங்களுக்குள் நட்பு இவ்வளவு வலுவாகக் காரணமே பகிர்ந்து கொள்ளுதல்தான்! கணவர், சகோதரி, மகள், 

தாய் என்று யாரிடமும் பேச முடியாத பல விஷயங்களை நாங்கள் மனம் திறந்து பேசிக் கொள்வோம். அப்போது கிடைக்கும் ஆறுதலும் நிம்மதியும் தனிதான். மனக் கவலைகளை, ஆதங்கங்களை  நாங்கள் பகிர்ந்து கொள்ளுவதால் மனம் லேசாகி கவலை பறந்தோடுவதை உணர்கிறோம். 


நாங்கள் பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. எங்கள் குழந்தைகள்  எங்களுக்கு ‘உபிச’ (உடன் பிறவா சகோதரி) என்ற பட்டமே கொடுத்திருக்கிறார்கள்!


இன்றும் நினைத்தால் உடனே போனில் பேசி வாய்விட்டுச் சிரிப்போம்!  பழைய நினைவுகளைப் பேசி மகிழ்வோம்!எத்தனை நெருங்கிய உறவுகள் இருந்தாலும் மனம் ஒன்றிய சிநேகிதிதத்திற்கு எதுவும் இணையாகாதுதான். 


எங்கள் முப்பது வயதுக்கு மேல் ஏற்பட்ட இந்த நட்பு, புரிந்து கொள்ளல் நிறைந்ததாக  இன்றுவரை   தொடர்கிறது. என் தோழியைப் பற்றி பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்புள்ள அப்பா 🙏🏼..11.6.'22

மேல்நாட்டு மருமகள்!

குருவாயூருக்கு வாருங்கள்..4