பிறந்தவீடு (சிறுகதை)(27.2.'21)
பிறந்தவீடு கார் அந்த கிராமத்தில் நுழைந்ததுமே கிரீஷும் கீர்த்தனாவும் 'உன்னோட வீடு எங்கேம்மா இருக்கு' என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். கணபதி அக்ரஹாரம் அருகில் அழகான சிறு கிராமம். 'இதோ இன்னும் கொஞ்ச தூரம்தான். போயிடலாம்' என்றான் சுரேஷ். சித்ராவின் மனம் அன்று அவளும், அவளுடன் பிறந்தவர்களும், சித்திகளின் குழந்தைகளுமாக ஆடிப் பாடி கூடி விளையாடிய நினைவுகளை அசை போட்டது. இது சித்ராவின் தாய்வழித் தாத்தா வீடு. அஞ்சல் நிலையத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய அவருக்கு மூன்று பெண்கள். ஒரே பிள்ளை. கோடை விடுமுறை ஆரம்பித்ததுமே மூன்று பெண்களின் குழந்தைகளும் இங்கு வந்து விடுவார்கள். தாத்தா வீட்டில் வண்டி இருந்ததால் அதில் ஏறி பக்கத்து ஊர்களைச் சுற்றி வருவார்கள். ஒரு மாதம் போவதே தெரியாது. சுரேஷ் சித்ராவின் மாமா பிள்ளை. சுரேஷின் தந்தை வெளியூரில் வங்கிப்பணியில் இருந்ததால் எல்லோரும் இணைந்து விளையாடிக் களிப்பது கோடை விடுமுறையில் மட்டுமே! சுரேஷுக்கு சித்ரா என்று சிறு வயதிலேயே பெரியவர்கள் முடிவு செய்து இப்போது இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்க வாசம். ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் ஏதாவது விசேஷங்களுட