தனிமை தொலைந்தது..

 







Wtwகதைஎழுது

Wtwstories2021

April2

தனிமை தொலைந்தது..மாற்றம் வந்தது.

"பாட்டி அங்க என்ன வேடிக்கை பார்க்கற. எனக்கு ரெண்டு கமர்கெட் கொடு"
குமார் பாட்டியின் கவனத்தை கலைத்தான்.

"நான் என்னத்தைபார்க்கப் போறேன். என்னை மாதிரி அந்த ஒத்தக் குயில் அங்கன உக்காந்து தனியா பாடிக்கிட்டிருக்கேனு பாக்கறேன்"

பக்கத்திலிருந்த பாரதி "ஏன் பாட்டி உனக்கு குடும்பம் குழந்தையெல்லாம் இல்லையா?"

"எல்லாம் இருந்தது ஒரு காலத்தில. எங்க வீட்டுக்காரர் கரகாட்டம் ஆடுவாரு. நான் மயிலாட்டம் ஆடுவேன்"

"நீ மயிலாட்டம் ஆடுவியா? வேடிக்கையா இருக்கு"

"அந்த நாள்ள நான் அம்புட்டு அழகா இருப்பேனாக்கும். சரோஜாதேவி, பத்மினினெல்லாம் என்னைப் பாராட்டுவாங்க"

"அட பாட்டிக்கு என்ன சந்தோஷம்" என்றான் குமார்!

"மயிலாட்டம்னா எப்படி? மயில் தோகையை பின்னால கட்டிக்கிட்டு ஆடுவயா?"

"உங்களுக்கெல்லாம் அதெல்லாம் எங்க தெரியப் போவுது? மயில் உடம்பு மாதிரி பெரிசா தோகையோட இருக்கும். அதை உடம்புல மாட்டிக்கிட்டு ஆடணும்"

"ஐயோ ரொம்ப வெயிட்டா இருக்காதா?" என்றாள் பாரதி.

"ஆமாம். அதல்லாம் கத்துக்கிட்டு ஆடணும். நான் ஒருத்திதான் இந்த சுத்து வட்டாரத்தில ஆடுவேன். என் மயிலாட்டத்தில கிறங்கிப் போய்த்தான் என் வீட்டுக்காரர் என்னை கட்டிக்கிட்டாரு."

பாட்டி அந்தநாள் நினைவில் சற்று ஆழ்ந்து விட்டாள்.

"பாட்டிக்கு வெட்கத்தை பாரு" என்றாள் பாரதி!

"சுத்தி இருக்கற ஊர்ல எங்க கோயில் திருவிழானாலும் அவர் கரகாட்டமும் என் மயிலாட்டமும் உண்டு"

"பாட்டி உங்க கதை ரொம்ப சுவாரசியமா இருக்கு"

"ஒத்தையில இருக்கேன்னியே..தாத்தாக்கு என்ன ஆச்சு?"

"அதை ஏன் கேக்கற? ஒரு வருஷம் திருவிழால பட்டாசு வெடிச்சப்போ ஒரே நேரத்தில எல்லாம் சேர்ந்து வெடிச்சு தீவிபத்து ஆயிடுச்சு. அதில நிறையபேர் இறந்துட்டாங்க. என் வீட்டுக்காரரும் அதில ஒருத்தர்."

பாட்டி கண்கலங்க, பாரதியும் குமாரும்,"அழாதீங்க பாட்டி. ஸ்கூல் மணி அடிச்சுடுச்சு. சாயங்காலம் வரோம்."

பாட்டியின் கதை சுவாரசியமாக இருக்க மாலை பள்ளி முடிந்து இருவரும் வந்தபோது பாட்டியின் கடையைக் காணோம். ஒரு ஓரமாக நின்றிருந்த பாட்டி இருவரையும் கூப்பிட்டாள்.

"கண்ணுகளா. நீங்க போனபிறகு ரெண்டு பேர் வந்தாங்க. சென்னைல அவங்க பழைய நாட்டுப்புற கலைகளை மறுபடியும் கத்து தரப்போறாங்
களாம். இந்தப் பக்கம் நான் நல்லா மயிலாட்டம் ஆடுவேன்னு தெரிஞ்சு எனக்கு ஏதோ விருதாமே அது தராங்களாம்."

"விருதுனா பரிசு. அதோட பணமும் கொடுப்பாங்க."

"அப்படியா கண்ணு. அதோட இதையெல்லாம் கத்துக் குடுக்க ஒரு இஸ்கூல் ஆரம்பிக்கப் போறாங்களாம். அங்க நான் மயிலாட்டம் பற்றி சொல்லிக் கொடுக்கணு
மாம்.அங்கயே தங்கணுமாம். சாப்பாடல்லாம் போட்டு சம்பளம் தராங்களாம்"

"இந்த வயசில நீ எப்படி கத்துத்தருவ?"

"அங்க வேற ஆளுங்க இருக்காங்களாம்.அவங்களுக்கு பழைய முறைகளை விளக்கமா சொல்லித் தரணுமாம்."

"அப்ப இனிமே நீ நெல்லிக்கா, எலந்தைப்பழம், கமர்கெட்டெல்லாம் விக்க வேண்டாம். தனியா இருக்கறதா அலுத்துக்கிட்டயே. இப்ப பாரு உனக்கு பெரிய சேஞ்ச் வந்துடுத்து"

"சேஞ்சா? அப்படின்னா?"

"அதான் ஒரு மாற்றம். இனி நீ ஒத்தைக் குயிலு இல்ல. எங்க ஸ்கூல் டீச்சரல்லாம் மாதிரி நீயும் டீச்சர். சந்தோஷமா போயிட்டு வா பாட்டி"

பாரதி கண்கலங்கி அழுது விட்டாள். பாட்டி அவர்களை அணைத்துக் கொண்டாள்.

"பாட்டி எங்களையெல்லாம் மறந்துடாத. அடிக்கடி வா"

"கண்டிப்பா கண்ணு. என் வீட்டுக்காரரோட இருந்த ஊரை மறப்பேனா? இல்ல உங்களை மறக்க முடியுமா? நல்லா படிங்க கண்ணுகளா. வரட்டுமா?"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சார்தாம் யாத்ரா..14

சார்தாம் யாத்ரா..9

சார்தாம் யாத்ரா..13