மார்கழியை வரவேற்போம்🙏🏼.9.1.'22..மார்கழி.25

 மார்கழியை வரவேற்போம்🙏🏼.9.1.'22..மார்கழி.25


மார்கழியில் நாம் தினமும் விடிகாலை  கோலம் போட்டு அதில் பூசணிப் பூவை வைக்கும் வழக்கம் உண்டு. அதன் காரணம் அறிவோமா!


அக்காலத்தில், திருமணத் தரகர்களோ, மாப்பிள்ளை - பெண் தேவை என்பதற்காக வெளியிடப்படும் கல்யாண விளம்பரங்களோ கிடையாது. எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைப்பார்கள். எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டார்கள்.


மார்கழி மாத அதிகாலையில் வீதி பஜனையில் வருபவர்களின் பார்வையில் இந்தப் பூக்கள் தென்படும். விவரத்தைப் புரிந்து கொள்வார்கள். 


தை மாதம் பிறந்த உடனே பேசி, கல்யாணத்தை முடிப்பார்கள். இதன் காரணமாகவே மார்கழி மாதத்தில் வீட்டு வாயிலில் இருக்கும் கோலத்தில் பூக்களை வைத்தார்கள். இதன் பொருள் புரியாமல் தற்காலத்தில் எல்லா வீடுகளிலும் இதனைக் கடைப்பிடிக்கிறோம்!


நேற்றைய கோலம்..Warli art rangoli

நிவேதனம்..பயறு பொங்கல்

இன்றைய கோலம்..Fusion rangoli

நிவேதனம் அவல் ரவை காரப் பொங்கல்
கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்புள்ள அப்பா 🙏🏼..11.6.'22

மேல்நாட்டு மருமகள்!

சார்தாம் யாத்ரா..9