மார்கழியை வரவேற்போம்🙏🏼2.1.'22..மார்கழி.20
மார்கழியை வரவேற்போம்🙏🏼2.1.'22..மார்கழி.20
ஏறத்தாழ நூறு சபாக்களில் ஐநூறுக்கும் அதிகமான கர்நாடக இசைக்கலைஞர்கள் தங்களது இனிய குரல்களாலும், வாத்தியங்கள் மூலமும் இசை அமிர்தத்தை இன்பமாகப் பொழிகிறார்கள். கடுங் குளிரிலும் இந்த இசைச் சாறலில் நனைய வெளிநாட்டிலிருந்து கூட அதிகம் பேர் இங்கு வருகிறார்கள்.
இசை ரசிகர்களின் விருப்பத்துக்கு
இணங்க சபாக்கள்
இலவசமாகவும், கட்டணத்துடனும் காலை 11 மணிக்கே கச்சேரிகளைத் தொடங்குகின்றன.
இரவு 10 மணிவரை நீளும் இக்கச்சேரிகளை இடை
விடாமல் ரசிகர்கள்
கேட்கும் விதத்தில் ஹரிகதை, வாத்தியம், வாய்ப்பாடு, பரதம், கதக், குச்சிபுடி, மோகினி
யாட்டம் என கர்நாடக இசையின் அனைத்து வடிவங்களும் ரசிகர்களுக்கு இசை விருந்தாக்கப் படுகின்றன.
இவற்றில் இந்துஸ்தானி இசை நிகழ்வுகளும் உண்டு. நாடகங்களும், இசை ஆராய்ச்சிக்குரிய விவாதங்களும் இந்த இசை விழாவில் அடக்கம்.
இசைவிழா உருவாக மற்றொரு காரணமும் கூறப்படுகிறது.
நாளை..
இன்று கோலம்..புள்ளிக்கோலம்
நிவேதனம்..பாதாம் பொங்கல்..வடை
கருத்துகள்
கருத்துரையிடுக