சார்தாம் யாத்ரா..12

 

பஞ்ச பத்ரி

விஷால்பத்ரி
பத்ரி விஷால் பத்ரிநாதரின் பிரதான தலமான பத்ரிநாத். பூஜைகள் நடக்கும்போது, 'ஜெய் பத்ரி விஷால் கி'என்று பக்தர்கள் கோஷம் எழுப்புகிறார்கள். அது பற்றி ஏற்கெனவே எழுதி விட்டேன்.

யோகபத்ரி 
ரிஷிகேஷிலிருந்து பத்ரி செல்லும் சாலையில் ஜோஷிமட்டிலிருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது யோகத்யான்பத்ரி ஆலயம்.  சாலையிலிருந்து சற்று தூரம் கீழே இறங்கி இந்தக் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

பாண்டுகேஷ்வர் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில்தான் யோகபத்ரி
யைக் குறித்துப் பாண்டு தவம் செய்ததால் இது பாண்டுகேஸ்
வர் ஆலயம் என்று பெயர் பெற்றுள்ளது.

இந்தக் கோவிலில் உள்ள யோகபத்ரி நாதர் பாண்டுவால்  பிரதிஷ்டை செய்யப்பட்டவர். பாண்டு தன்  மனைவிகள் குந்தி, மாத்ரி இருவருடனும் இங்கே தங்கி யிருந்தபோதுதான் பாண்டவர்கள் பிறந்தனர்.

அதன் பிறகு ஒரு சமயம், மாத்ரியுடன் இணைந்து அதனால் முனிவர் சாபத்தின்படி தலை வெடித்து இறந்ததும், தன்  கணவனின் மரணத்துக்குத் தானே பொறுப்பு என்று கருதி மாத்ரி தன்  உயிரை மாய்த்துக்கொண்டதும் இந்த இடத்தில்தான்.

சந்நிதியில் யோகபத்ரியும், லக்ஷ்மிநாராயணரும்
மாத்ரியின் விக்கிரகமும்  இருக்கிறது. சந்நிதியின் வலப்புறத்தில் மகாலக்ஷ்மி சந்நிதியும் இடப்புறம் வாசுதேவர் சந்நிதியும் உள்ளது.யோக நிலையில் ஆளுயர சாளக்ராம மூர்த்தி. வெண்கலச் சிலையும் உள்ளது.

வனவாசத்தின்போது பாண்டவர்கள் ஒவ்வொரு வருடமும் இங்கு வந்து தங்கள் தந்தைக்குத் திதி கொடுத்த
தாகக்கூறப்படுகிறது.

பாண்டவர்களும்தமது காலம் முடிந்த பிறகு இத்தலத்தில் இராச்சியத்தை பரீக்ஷித்திடம் ஒப்படைத்து விட்டு 
சுவர்க்காரோகணி எனப்படும் சொர்க்கத்திற்கான பயணத்தை இங்கிருந்து  துவங்கினர்.

பவிஷ்யபத்ரி  
இந்த ஊர், ஜோஷி மட்டிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில், 2744 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மலைமீது ஏறிச் செல்ல வேண்டும். நரசிம்மர் தரிசனம் தருகிறார்.ஜோஷிமட் நரசிங்க மூர்த்தியின் கை தேய்ந்து விழும் போது ஜெய-விஜய (நர நாராயண)மலைகள் இரண்டும் இணைந்து பத்ரி செல்லும் பாதை அடைபட்டு விடும்.அப்போது இந்த பவிஷ்யபத்ரியில் பெருமாளை தரிசனம் செய்ய முடியும் என்கிறார்கள். 

விருத்தபத்ரி 
இங்கே நாரதர் தவம் செய்தபோது, விஷ்ணு ஒரு முதியவராக அவர் முன்
தோன்றியதால் இந்த இடம் விருத்த பத்ரி என்று அழைக்கப்படுகிறது.

முதலில் பத்ரிநாத் விக்கிரகம் இங்கேதான் இருந்ததாகவும், கலியுகத்தில்தான் பத்ரிநாராயணனே விரும்பி இங்கிருந்து சென்று,பத்ரிநாத்தில் உள்ள நாரத குண்ட் என்ற குளத்துக்குள் அமிழ்ந்திருந்ததாகவும், ஆதிசங்கரர் அந்த விக்கிரகத்தைத் தேடி எடுத்து பத்ரியில் பிரதிஷ்டை செய்ததாகவும் இங்குள்ள அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜோஷி மட்டிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில், பிப்பல் கோட் போகும் பாதையில் அமைந்துள்ளது. ஆதிசங்கரர் முதலில் தரிசித்த தலம். நாரதருக்கு நாராயணர் முதியவராகக் காட்சி தந்ததால் இப்பெயர் ஏற்பட்டது.  

ஆதிபத்ரி 
கர்ண பிரயாகையிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் ராணி கேத் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. இங்கே குப்தர்கள் கால கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் சங்கு, சக்கரம், தாமரை,கதை இவற்றுடன் தரிசனம் தருகிறார் நாராயணன். 

இவை எல்லாவற்றையும் தரிசனம் செய்வது சாத்தியமில்லை. நாட்கள் போதாது. மலைகளில் ஏறி இறங்கி செல்வதும் கடினம்.
நாங்கள் பத்ரிநாத் (விஷால்பத்ரி) மற்றும் யோகபத்ரி மட்டுமே தரிசித்தோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சார்தாம் யாத்ரா..14

சார்தாம் யாத்ரா..9

சார்தாம் யாத்ரா..13