சார்தாம் யாத்ரா..4
சார்தாம் யாத்ரா..4
சரஸ்வதி நதியின் தோற்றம்
சரஸ்வதி நதியைக் காண நம் மனம் ஆவலாகிறது. இங்குதான் சரஸ்வதி நதி தோன்றுகிறது.இரு மலைகளுக்கிடையே அலை மோதி ஆர்ப்பரிக்கும் நதியாக வெளிவருகிறது.
ஓ.... என்கிற சப்தம் மட்டும் கேட்கும் அமைதியான சூழ்நிலையில், நாம் நிற்கும் இடத்திலிருந்து சற்றே கீழே, நம்மால் நெருங்க முடியாத ஒரு பள்ளமான பகுதியில் இருக்கிறது சரஸ்வதியின் உற்பத்தி ஸ்தானம். ஆக்ரோஷத்துடன் ஆரவாரமாக சற்றே ஆணவத்துடன்
கண்ணைப் பறிக்கும்
வெண்ணிறத்தில் அதிவேகமாக கிளம்பும் சரஸ்வதி பிரமிக்க வைக்கிறாள். இவளின் மறைவுக்கு காரணம் யார்?
ஒரு சுவையான புராண சம்பவம்!மகாபாரதம் எழுதுவதில் ஈடுபட்டிருந்த விநாயகர், ஆர்ப்பரிக்கும் நதியை அமைதியாகச் செல்லும்படிக் கூறினார். ஆனால் சரஸ்வதி நதியோ, அகம்பாவம் கொண்டு மேலும் பேரொலியுடன் ஆர்ப்பரித்தாள். அதனால் கோபமுற்ற விநாயகர்...நதியே நீ கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து போவாய், உன்பெயரும் மறையும்...எனச் சாபமிட்டார்.
தன் நிலை உணர்ந்த சரஸ்வதி நதி, தன்னை மன்னிக்குமாறு பணிந்து வேண்டினாள். கஜமுகனும் நதியின் மீது கருணை கொண்டு...நதியே!நீ இங்கு மறைந்து, கங்கையும்,
யமுனையும், சங்கமம் ஆகும்
அலகாபாத்தில்,மூன்றாவது
நதியாக் கலந்து புகழ் பெறுவாய்...என்றார். அருகில் சரஸ்வதிக்கு ஆலயம் உள்ளது.
சரஸ்வதி கர்வம் அடங்கி வெளியே வந்து அலக்நந்தா ஆற்றுடன் கலந்தபின், அந்தர்யாமியாகிவிடுகிறாள். சரஸ்வதியும் அலக்நந்தாவும் கலக்குமிடம் மிகவும் ரம்மியமாக இருக்கிறது. இந்த இடத்திற்கு கேசவ பிரயாகை என்று பெயர். சரஸ்வதி நீரை நாம் அங்கிருக்கும் குழாய்களில் பிடித்துக் கொள்ளலாம்.
இதற்கும் மேலே பஞ்சபாண்டவர்கள் சுவர்க்கம் சென்ற இடம் உள்ளது. அவ்விடம் 'பீம்புல்' பீமன்பாறை எனப்படும். ஐவரும் சென்றபோது சுவர்க்கம் செல்லும் வழியில்,சரஸ்வதி
நதியைக் கடக்க முடியாமல் பாஞ்சாலி தவிக்க, பீமன் ஒரு பாறையைப் பாலமாகப் போட்டதாக புராண வரலாறு. அதில் பீமனின் கைத்தடங்
களும் தெரிவதாக எழுதப்பட்
டுள்ளது. தர்மர் தவிர மற்ற ஐவரும் அங்கே தம் உடலை விட்டு சுவர்க்கம் செல்ல, தர்மர் மட்டுமே மனித உடலுடன், அறமாகிய நாய் வழிகாட்ட
மேலுலகம் சென்றார்.அவர்கள் சென்ற வழி, மலைப்படிக்கட்
டுகள், உயர்ந்தோங்கிய மலைப்பாதை இன்றும் தெரிகிறது.
மனா கிராமம் இந்தியாவின் கடைசி கிராமம். அடுத்து திபெத்தின்(சீனா) எல்லை தொடங்கி விடுகிறது. அங்குள்ள தேனீர் விடுதியும் இந்தியாவின் கடைசி தேனீர்க்கடை என்ற சிறப்பைப் பெறுகிறது.இங்கு தின்பண்டம், குடிநீர், பானங்கள், டீ, பிஸ்கட் அனைத்தும் கிடைக்கின்றன.
இதைப்போலவே வியாச குகை அருகேயும் இந்தியக் கடைசி டீக்கடை உள்ளது.
இமயமலையின் ஒவ்வொரு இடத்திற்கும் தனிப்பட்ட சிறப்பு உள்ளது. அதனாலேயே அது தேவபூமி என்ற சிறப்பைப் பெறுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக