மேல்நாட்டு மருமகள்!

 

#wtwகதைஎழுது #wtwstories2021

#June1

மேல்நாட்டு மருமகள்!

குடந்தை அருகில் பட்டீஸ்வரத்தில் வாஞ்சிநாதன் ஒரு மிராசுதார். அப்பா விஸ்வநாதன் மறைவுக்கு பின்  நிலங்களை நன்கு பராமரித்து விவசாயம் சிறப்பாக செய்து வந்தார். ஊரில் பெரிய மனிதர். பக்திமான். ஆலயங்களில் எந்த விழா நடந்தாலும்வாஞ்சி
நாதன்தான் முதலில்
ஆரம்பித்து வைப்பார். அவரது ஒரே பிள்ளை வேணு  சென்னையில் வங்கி அதிகாரியாகப் பணிபுரிகிறார்.

அவர் அம்மா சுப்புலட்சுமிக்கு எண்பது வயதுக்கு மேல் ஆனாலும் எந்த நோயுமின்றி திடமாக இருப்பதோடு மடி ஆசாரம் அதிகம். மாட்டுப்பெண் விசாலம் எல்லோரையும் அனுசரித்து செல்பவள்.

வாஞ்சிநாதனின் தம்பி  ராமநாதன் மேல்படிப்பு படிக்க அமெரிக்கா சென்றவர் அங்கேயே வேலை கிடைத்து அமெரிக்கவாசியாகி விட்டார். அவர் மனைவி குடந்தையை சேர்ந்தவள். பிள்ளை ஒன்றும் பெண் ஒன்றுமாக இரண்டு குழந்தைகள். பிள்ளை சதீஷ் இன்ஜினியரிங் படித்து அங்கேயே நல்ல வேலை. பெண் ஷ்ரேயா கல்லூரியில் படிக்கிறாள்.

சுப்புப்பாட்டிக்கு அமெரிக்க பிள்ளை மேல் கூடுதல் பாசம் உண்டு. அவன் அமெரிக்கா
வில் வாழ்வது பிடிக்காமல்
இங்கு வரும்படி சொல்லுவார். அவரது குழந்தைகள் அந்த நாகரிகத்தில் பழகிவிட்டதால் இங்கு வருவது கஷ்டம் என்று சொல்லிவிட்டார். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடும்பத்தோடு வந்து இரு வாரங்கள் தங்கிச் செல்வார்
கள்.

ராமநாதனின் பிள்ளை சதீஷ் அவனுடன் பணி புரியும் ஐரோப்பிய பெண் அலீஷியாவை காதலிப்பதாக சொன்னபோது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அவளை அழைத்து வந்து அறிமுகப் படுத்தியபோது அவளது நல்ல குணத்திலும் மரியாதையிலும் பிடித்துப் போய் அமெரிக்காவிலேயே தம் முறைப்படி திருமணம் செய்து வைத்தார் ராமநாதன்.

அம்மா என்ன சொல்வாளோ என்று ராமநாதன் விஷயத்தை சொன்னபோது அமைதியாகி விட்டார் சுப்புப்பாட்டி. பிறகு...சரி. அவன் ஆசைப்படி நன்னா இருந்தா சரிடா.என் பேராண்டி சீமையிலிருந்து எப்போ வருவானோ? அவனையும் அவன் பெண்டாட்டியையும் பார்க்கணுமே...என்றார் ஆசையாக!

திருமணம் முடித்து ஒரு குழந்தையும் பிறந்த பிறகுதான் அவர்களால் வர முடிந்தது. ராமநாதன் அண்ணாவிடம்
...நம்ம ஓட்டு வீடு இருந்ததே.அதை சரி பண்ணி  வை. அலீஷியாவுக்கு அந்த கிராம வீட்டில் இருக்கணுமாம். ஆசையா சொல்லிண்டிருக்கா...

...என்னடா சொல்ற? அமெரிக்க பொண்ணு ஓட்டு வீட்டில எப்படி இருப்பா? சரி..ஒரு ரூமை ஸீலிங் போட்டு AC, கட்டில்லாம் போட்டு வைக்கிறேன்...என்றார் வாஞ்சிநாதன்.

மறுநாளே ஆட்களைக் கூப்பிட்டு வீட்டை சரிப்படுத்தி வசதிகளை செய்தார். நான்கு நாளில் ராமநாதன் குடும்பம் சென்னை வந்து அங்கிருந்து  காரில் பட்டீஸ்வரம் வந்துவிட வீடு அமர்க்களப் பட்டது. பாட்டி   காரம் ஸ்வீட் என்று அமர்க்களமாக பண்ணியி
ருந்தார்.

அவர்கள் வந்ததும் பாட்டி ஆர்த்தி கரைத்து வைத்து எடுத்ததும் வலதுகாலை எடுத்து வைத்து உள்ளே வரச் சொன்னார். அலீஷியா எல்லோரையும் பார்த்து கைகூப்பி வணங்கினாள்.
...சௌக்யமா பாட்டி... என்றாள். சதீஷுடன் இணைந்து நமஸ்காரம் செய்தவள் பாட்டியை அணைத்துக் கொள்ள போக சதீஷ் பாட்டி மடி என்பதால் அதெல்லாம் கூடாது என்று சொல்ல அவள் முகம் வாடிவிட்டது. அதைப் புரிந்து கொண்ட பாட்டி..போடா. மடியாவது ஒண்ணாவது. இங்க வாடிம்மா...என்றபடியே அவளைக் கட்டியணைத்து அவளை தடவிப் பார்த்து...எவ்வளவு வெள்ளையா பால் மாறி இருக்காளேடா..என்றபடியே உச்சி முகர்ந்தாள்.

..உன் கொள்ளுப் பேரனைப்பாரு..என்று ராமநாதன் குழந்தையைக் கொடுக்க அதன் குட்டிக்காலை தன் கையால் தூக்கி..என் கையையும் அவன் காலையும் சேர்த்து ஒரு ஃபோட்டோ எடுடா...என்று சொல்ல சதீஷ்.
..இது என்ன ஆசை பாட்டி..என்று சிரித்துக் கொண்டே  எடுத்தான்..அதை ஒரு ப்ரிண்ட் போட்டு எனக்கு கொடு..என்றாள்.

உள்ளே போய் எல்லாரும் பேசிக் கொண்டே சாப்பிட்டதும் சதீஷ் அலீஷியாவை அழைத்துக் கொண்டு ஓட்டு வீட்டுக்கு சென்றான். 'வாவ். சூப்பர்' என்றவள் கொல்லையில் கிணற்றைப் பார்த்து தானே தண்ணீர் இழுத்தாள். அங்கு வெள்ளை அடித்துக் கொண்டிருந்த பெரியவரிடம்..ஹலோ சௌக்யமா?..என்றாள். அவர் சதீஷிடம்..நம்ம நாட்டு பொண்ணு மாதிரி நல்லா பேசுறாங்களே..என்றார்.

தெருவில் அத்தனை பேரும் அவளை அதிசயமாய் பார்க்க எல்லோருக்கும் வித்யாசமில்லாமல் கை கொடுத்து மகிழ்ந்தாள். குழந்தைகளுக்கு தான் கொண்டு வந்த சாக்லேட்
களைக் கொடுத்தாள்.

பாட்டி அவளைத் தன்னருகில் அமர்த்திக் கொண்டு சாப்பாடு போட்டு அவள் கையால் சாப்பிடுவதைப் பார்த்து ஆச்சரியப் பட்டார்.
...வெளிநாட்டுக்காரா ஸ்பூன்ல சாப்பிடுவாளாமே? இவ அழகா கையால சாப்பிடறாளே..
என்றாள்!
...ஏண்டிம்மா..உங்க ஊர்ல இருக்கறவனையல்லாம் விட்டு இந்த கறுப்பனை எப்படி கல்யாணம் பண்ணிண்ட..
என்றுகேட்டாள். அதைப் புரிந்து கொண்ட அலீஷியா சதீஷை அணைத்துக் கொண்டு..ஐ லவ் ஹிம்..என்று முத்தமிட, பாட்டியின் வெட்கத்தைப் பார்க்கணுமே! ..உன்னை நான் அல்லினு கூப்பட்றேன்..
என்றாள்!

நாட்கள் ஓடியது. குல தெய்வக் கோயிலுக்கு எல்லோருடனும் அழகாக மடிசார் கட்டிக் கொண்டு சென்ற அலீஷியா
வைப் பாராட்டாதவர் இல்லை.

ஊருக்கு திரும்ப எல்லோரும் கிளம்பினார்கள்...பாட்டி என் செலக்ஷன் நன்னாருக்
கோன?...என்ற சதீஷிடம்...சூப்பர். நீங்க ஊருக்கு கிளம்பறேளேனு வருத்தமா இருக்குடா..என்று கண்கலங்கினாள். குழந்தையை வாங்கி முத்தமிட்டு..வருஷா வருஷம் வந்துட்டு போடா..என்றாள். பாட்டியையும் கிராமத்தையும் விட்டுப் பிரிய மனமின்றி அழுதுவிட்டாள் அலீஷியா!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்புள்ள அப்பா 🙏🏼..11.6.'22

குருவாயூருக்கு வாருங்கள்..4