குருவாயூருக்கு வாருங்கள்..10
வில்வமங்கலத்தின் நண்பரான மானதேவன் என்ற அரசர் தானும் கண்ணனைப் பார்க்க ஆசைப்படுவதாயும்,வில்வமங்கலம் அதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் வேண்டினார்.
வில்வமங்கலம் ....கண்ணன் மறுநாள் விடிகாலை இலஞ்சி மரத்தடியில் விளையாடும்போது நீங்கள் காணலாம். ஆனால் தொடக்கூடாது...என்றார்.
அதேபோல் மறுநாள் கண்ணன் விளையாடும்போது மன்னர் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணனை ஆலிங்கனம் செய்து கொள்ள...நீ என்னைத் தீண்டுவாய் என்று வில்வமங்கலம்
சொல்லவில்லை...என்றபடி
மறைந்து விட்டார் கிருஷ்ணர்.
அணைக்கும்போது கிருஷ்ணனின் மயிற்பீலி ஒன்று மன்னன் கையில் கிடைத்தது. அது இன்றுவரை நடைபெறும் கிருஷ்ணனாட்டத்தின் கிருஷ்ணனின் தலைகிரீடத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மானதேவர் இயற்றிய 'கிருஷ்ணகீதி' என்ற கிருஷ்ணன் கதை 8 அத்தியாயங்கள் கொண்டது. அவதாரம், காளியமர்த்தனம்,
ராஸக்ரீடா, கம்ஸவதம்,ஸ்வயம்வரம்,
பாணயுத்தம், விவிதவதம்,
ஸ்வர்காரோகனம். இவை இன்றுவரை குருவாயூரில் ஆலயத்தில் இரவு கருவறை நடை சாத்தியபின் பக்தர்கள் வேண்டுதலாக கிருஷ்ணனாட்டம் என்ற பெயரில் நடைபெறுகிறது.
உபன்யாச சக்கரவர்த்தி சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் தொழுநோயால் பாதிக்கப் பட்டிருந்தபோது நாராயணீயத்தை பாராயணம் செய்து குருவாயூரப்பன் அருளால் நோய் முற்றிலும் நீங்கப் பெற்றார்.குருவாயூர் மற்றும் நாராயணீயத்தின் மகிமையை நம் தமிழ்நாட்டில் பரவச் செய்ததில் அவருக்கு பெரும்பங்கு உண்டு.
ஐயனை தரிசித்து விட்டு வெளிவருமபோது பிரகாரத்தில் ஆல்ரூபம் என்ற பெயரில் உடல்உறுப்புகள் வீடு தொட்டில் போன்றவற்றின் வெள்ளி உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. நமக்கு என்ன நோய் அல்லது குறை தீர வேண்டுமோ அதைக் கைகளில் எடுத்து மனமொன்றி வேண்டிக் கொண்டு, நம்மால் முடிந்த காணிக்கை உண்டியலில் சேர்க்க வேண்டும்.
ஒரு வெண்கல உருளி நிரம்ப குந்துமணி வைக்கப்
பட்டிருக்கிறது. இதற்கும் ஒரு
கதை உண்டு. குருவாயூரப்
பனிடம் மிகவும் பக்தியுள்ள ஒரு முதியவள் மிகவும் ஏழை.
எல்லாரும் கோபாலனுக்கு விலை உயர்ந்த பொருட்
களைக் காணிக்கையாகக் கொடுப்பதைப் பார்த்து தானும் ஏதாவது கொடுக்க நினைத்தாள். அச்சமயம் குந்துமணிகள் ஒரு மரத்திலிருந்து நிறைய கீழே விழுந்திருப்பதைக் கண்டு, அவற்றை தினமும் எடுத்து அலம்பி ஒரு பையில் வைத்திருந்தாள்.
வெகுதூரத்திலிருந்து அவற்றை சமர்ப்பிக்க அவள் குருவாயூர் சென்ற நாள் விஷு. அன்று அவ்வூர் மன்னன் வழிபட வருவதால் அனைவரையும் வழிவிடச் சொல்லி தள்ளினர். நிலை தடுமாறிய முதியவள் கீழே விழ, குந்துமணிகள் கீழே கொட்டிவிட்டது. அச்சமயம் திடீரென்று அரசன் ஏறி வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. மன்னன் அஞ்சி மணிவண்ணனை வேண்ட, கருவறையிலிருந்து...எங்கே என் குந்துமணிகள்?...என்ற குரல் கேட்டது.
அனைவரும் தவறை உணர்ந்து அந்த முதியவளை அழைத்து அவளது குந்துமணிகளைத் திரட்டி இறைவன் முன் வைத்தபின்பே யானை சரியானது. அதுமுதல் அப்பனை அன்புடன் பக்தி செய்த மூதாட்டியின் பெருமையை அனைவரும் அறிய குந்துமணிக்கு இறைவன் சன்னிதியில் இடம் கிடைத்தது.
பள்ளியில்படிக்கும் குழந்தைகள் இந்த மணிகளை இரு கையாலும் அள்ளி எடுத்து மும்முறை அதிலேயே போட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். நானும் அதனை கைகளால் அளைந்து விட்டு, அதில் சில நாணயங்களைப் போட்டேன்!
கண்ணனின் லீலைகள் சொல்லி மாளாது. கடைசி பகுதி நாளை..
கருத்துகள்
கருத்துரையிடுக