கங்கை நதிக் கரையில்..1
#wtwstories2021 #wtwகதைஎழுது #june2
#Story1
தாமதமாகக் கதை எழுத மன்னிக்கவும். பாதி எழுதி வைத்து வேலை அதிகமானதால் கதையை முடிக்க முடியவில்லை. இது தனித்தனி கதை இல்லை. தொடர்கதை.
கங்கை நதிக் கரையில்..1
சுந்தரேசனும் சாரதாவும் இரண்டு குழந்தைகளுடன் மதுரையில் வசித்து வந்தனர். சுந்தரேசனின் அத்தை பெண் சாரதா. மனமொத்த தம்பதிகள். 9 வயது மீனாவும், 6 வயது மகேஷுமாக இரண்டு குழந்தைகள். சில வருடங்களுக்கு முன்பு இறந்த சுந்துவின் (சுந்தரேசனின் சுருக்கம்!) தந்தை காசி
போக மிகவும் ஆசைப் பட்டும் போகமுடியவில்லை. அவரது ஆசையைப் பூர்த்தி செய்ய காசிக்கு செல்ல ஏற்பாடுகளை செய்தார்.
சென்னை வரை ரயிலில் சென்று அங்கிருந்து விமானத்தில் செல்வதாக ஏற்பாடு. கிளம்பும்போது அவர்கள் வீட்டு பசு காமாட்சியும் கன்றுக்குட்டி பாருவும் கம்பி வழியே கண்ணீரோடு வருத்தமாக பார்த்தது. 'பத்து நாளில் வந்துடுவோம் ஜாக்கிரதையா இரு' என்று மீனா அதைத் தடவி முத்தமிட்டு வந்தாள்.
அங்கு காசி அலகாபாத் கயா எல்லா இடமும் சென்று பித்ரு காரியங்களை முடித்தனர்.'ஹே கங்கே..என் தவறுகளுக்கு பிராயச் சித்தம் செய்து விட்டேன். என்னைக் காப்பாற்று' என்று வேண்டினார்கள். கிளம்பும் முதல் நாள் கங்கையில் படகு சவாரி செய்யும் ஆசையில் நால்வரும் சுற்றிலும் ரசித்துக் கொண்டே சென்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக