குருவாயூருக்கு வாருங்கள்..2
கிருஷ்ணனின் லீலைகள் ஒன்றா..இரண்டா?
துவாபர யுகத்தில், ‘துவாரகையை ஏழு நாட்களில் கடல் கொள்ளும். அந்த வெள்ளப் பரப்பில் கிருஷ்ண விக்கிரகம் மிதக்கும்… அதை தேவகுரு பிருகஸ்பதி மூலம் பிரதிஷ்டை செய்ய வேண்டும்!’ என்று உத்தவரிடம் அருளினார் ஸ்ரீகிருஷ்ணர்.
குருவும் வாயு பகவானும் அந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ய இடம் தேடினர். அப்போது கேரளத்தில் தாமரைக் குளக்கரை ஒன்றில் சிவபெருமான் தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார்கள்.
அவர் அருளியபடி விஸ்வகர்மா நிர்மாணித்த கோயிலில் அந்த விக்கிரகத்தை குருவும் வாயுவும் பிரதிஷ்டை செய்தனர்.
அந்த சிவபெருமான் மம்மியூரில், பார்வதிதேவியுடன் எழுந்தருளியுள்ளார் என்பது ஐதீகம். இவ்வாறு குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்ததால் இந்தத் தலம் ‘குருவாயூர்’ ஆனது.
பரிக்ஷித்து மன்னனின் மகன் ஜனமேஜயன். அவன் தன் தந்தையின் மரணத்துக்குக் காரணமான நாக அரசனான தட்சகன் என்ற பாம்பை பழி வாங்கும் பொருட்டு உலகில் உள்ள பாம்புகளைக் கொன்று குவித்தான்.
அவ்வாறு இறந்த அப்பாவிப் பாம்புகளது சாபத்தால், ஜனமேஜயனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. கொடுமை தாங்காமல் ஜனமேஜயன் தற்கொலை செய்ய முயன்றபோது, அவன் முன் தத்தாத்ரேயர் தோன்றினார்.
அவரது அருளாசியின்படி ஜனமேஜயன், குருவாயூர் சென்று குருவாயூரப்பனின் திருவடி தொழுது நோய் நீங்கியதுடன் சகல வளங்களும் பெற்றான் என்கின்றன புராணங்கள்.
குருவாயூர் கோயில்- சதுர வடிவில், மலையாள கட்டட பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கூரைகள் செப்புத் தகட்டால் வேயப்பட்
டுள்ளன. இதன் கிழக்கு கோபுர வாசலில் இருந்தே குருவாயூரப்பனை பக்தர்கள் தரிசிக்கும்படியும் சித்திரை வஷுவன்று காலைக் கதிரவனின் ஒளிக் கற்றைகள் குருவாயூரப்பன் திருவடிகளில் விழுமாறு அமைக்கப் பட்டுள்ளது.
தொடரும்..
கருத்துகள்
கருத்துரையிடுக