குருவாயூருக்கு வாருங்கள்..3

 


ஆலயத்தின் கிழக்குக் கோபுரம் வழியே நுழைந்தால் வெளிப் பிராகாரம். இங்கு, பொன் முலாம் பூசப்பட்ட சுமார் நூறு அடி  உயரக் கொடி மரமும் இதன் இருபுறமும் 13 அடுக்குகளுடன் 7 மீட்டர் உயரமுள்ள தீபஸ்தம்பங்களும் உள்ளன. இங்குதான் செண்டை மேளங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட யானைகள் காலையில் நாராயணனை வழிபட வரிசையாக நிற்கும். வட கிழக்கே க்ஷேத்திர பாலர்.


கொடிமர மண்டபத் தூண்களின் கீழே அமர்ந்து பக்தர்கள் பாகவதம் அல்லது நாராயணீயம் படிப்பது வழக்கம். ஸ்ரீகுருவாயூர் க்ஷேத்திரத்தில் ஸ்ரீமத் பாகவத பாராயணம் செய்வது ரொம்ப முக்கியமான ஆராதனை என்று ஸ்ரீகாஞ்சி மகா

பெரியவர் சொல்லியிருக்

கிறார்.


மூலஸ்தானத்தின் இரு புறமும் சண்டன்- பிரசண்டன், அனந்தானந்தர்கள். கருவறைப் படிக்கட்டுக்குக் கீழே இந்திரனும், மண்டபத்தில் கருடனும், தென்கிழக்கு மூலையில் அக்னியும் உள்ளனர்.


தெற்கில் கணபதி, தட்சிணாமூர்த்தி, எமன், வீரபத்ரர், விக்னேச்வரர், ஐயப்பன், சப்தமாதர்களும் மேற்கில் அனந்தசயனன் மற்றும் வருணனும், வடமேற்கில் வாயு, துர்கை மற்றும் சுப்பிரமணியரும், வடக்கில் சோமன், வைச்ரவணனும் வடகிழக்கில் நிர்மால்யதாரி, ஈசானன், பிரம்மா ஆகியோரும் உள்ளனர். கிணற்றில் வருணன் உள்ளார்.


பிராகாரத்தின் தென்கிழக்கு மூலையில் கூத்தம்பலம் உள்ளது. இதன் வடக்கில், தர்ம சாஸ்தா மேற்கு பார்த்தபடி வீற்றிருக்கிறார்.வடக்கு பிரகாரம் யானைப்பந்தல் மண்டபம். இதன் மேல் ஒரு சதுர துவாரம் உள்ளது. ஆதிசங்கரர் ஒருநாள் ச்ருங்கேரிக்கு வான்வழியே சென்றபோது  குருவாயூர் ஆலயத்தில் சீவேலி நடக்க, கீழே இறங்காமல் அலட்சியமாய் சென்றார். 


அவர் அகந்தையை அடக்க எண்ணிய இறைவன் அவரைக் கீழே விழும்படி செய்தார். மூர்ச்சை தெளிந்த சங்கரருக்கு விஷ்ணு தரிசனம் கிடைத்தது. அங்கு 41 நாட்கள் தங்கி பூஜைமுறைகளை வகுத்து, கோவிந்தாஷ்டகம் இயற்றினார். இன்றும் அந்த துவாரத்தை அங்கு காணலாம். அதற்கு அடையாளமாக கீழே ஒரு சதுரம் வரையப்பட்

டுள்ளது. இன்றும் சீவேலி செல்லும்போது வாத்ய இசையை அவ்விடம் வரும்போது நிறுத்தி விட்டு செல்வார்களாம்.

தொடரும்..கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்புள்ள அப்பா 🙏🏼..11.6.'22

மேல்நாட்டு மருமகள்!

சார்தாம் யாத்ரா..9