குருவாயூருக்கு வாருங்கள்..4

 


வெளிப்பிராகாரம் செல்லும் வழியில் வலப்புறம் உள்ள திண்ணையில், ‘நிருத்தம்’ என்ற இடத்தில் வில்வமங்கள சுவாமி நிஷ்டையில் அமர்வது வழக்கம். திருப்புகை தரிசனம் முடிந்ததும் பகவான் அவருக்குக் காட்சி அளிப்பாராம். இந்த இடத்தில் வரவு செலவு கணக்குகளை வாரியர் குலத்து நபர் படிக்க, பகவான் கேட்பதாக நம்பிக்கை.

கோபுரத்துக்கு வெளியே இருக்கும் கல்யாண மேடையில்தான்  திருமணங்கள் நடைபெறும்.


ஆலயத்தின் வடமேற்கு மூலையில் குரு மற்றும்  வாயுவின் அதிஷ்டானங்கள் உள்ளது. இங்கு அவர்களுக்கு அன்னம், பூ, தீர்த்தம் ஆகியவை நிவேதிக்கப்படுகிறது.


ஸ்ரீகுருவாயூரப்பன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டபோது, அங்குள்ள மரச் சுவர்கள், தூண்கள் ஆகியன சேதமடைந்தன. பிறகு பிரஸ்னம் மூலம் கிடைத்த உத்தரவுப்படி, மறுபடியும் தூண்கள் மற்றும் சுவர்களை கருங்கற்களால் நிர்மாணிக்க தீர்மானித்தனர். அதற்காக தமிழ்நாட்டில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர். ஸ்ரீவிஷ்ணுவின் தசாவதாரங்

களைக் குறிக்கும் சிற்பங்க

ளுடன் கூடிய பத்து தூண்கள் தயாராயின. அதில்

ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தைக் குறிக்க, ஒரு தூணில் ‘கம்ச வத’ காட்சியை வடித்திருந்தார் சிற்பி.


மறு நாள் சிறுவன் ஒருவன் தலைமைச் சிற்பியிடம் வந்து ‘‘இங்கு கிருஷ்ணனை, வேணு கோபாலனாக செதுக்கி

யிருக்கும் தூணை வையுங்கள்!’’ என்றான்.


‘‘அப்படி ஒரு சிற்பத்தை நாங்கள் இதுவரை வடிக்க வில்லையே!’’ என்றார். உடனே சிறுவன் சிற்ப வேலை நடக்கும் இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று ஸ்ரீகிருஷ்ணர், வேணுகோபாலனாக விளங்கும் தூணைக் காட்டினான். வியப்படைந்த சிற்பி, திரும்பிப் பார்த்தபோது சிறுவனைக் காணவில்லை.


வந்தது ஸ்ரீகுருவாயூரப்பனே என்பதை உணர்ந்த தலைமைச் சிற்பி, அந்தத் தூணையே அங்கு நிறுவினார். இந்தத் தூண் ஸ்ரீகுருவாயூரப்

பனாலேயே படைக்கப்பட்டதாக ஐதீகம். அதன் பிறகு ‘கம்ச வத’ தூணை உட்பிராகாரத்தில் வைத்திருக்கிறார்கள்.

தொடரும்..கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்புள்ள அப்பா 🙏🏼..11.6.'22

மேல்நாட்டு மருமகள்!

சார்தாம் யாத்ரா..9