குருவாயூருக்கு வாருங்கள்..5

 


கோயிலுக்கு நேர் கிழக்கில் சற்றுத் தள்ளி அரச மரம் ஒன்றும் அதன் அடிப்புறம் சிறகு விரித்த நிலையில் கருடன் சிலை ஒன்றும் உள்ளது.


இதைச் சுற்றி சிமெண்ட் மேடையும் அதன் மீது கம்பி வேலியும் அதில் இரண்டு இலை போன்ற வடிவங்களும் உள்ளன. ஜெயலலிதா இரண்டாவது தடவை ஆட்சிக்கு வந்ததும் யானை ஒன்றை இந்தக் கோயிலுக்கு வழங்கியதாகக் கூறினார்கள்.


மஞ்சுளா என்ற வாரியர் குலப் பெண் தினமும் இரவில் குருவாயூரப்பனுக்கு சார்த்த பூமாலை கொண்டு வருவது வழக்கம். ஒரு நாள் தாமதமானதால் கோயில் நடை மூடப்பட்டு விட்டது.


கலக்கமடைந்தாள் மஞ்சுளா. அப்போது அவளை ஆசுவாசப் படுத்திய பூந்தானம் அடியார், அவள் நின்றிருக்கும் ஆல மரத்தின் அடியையே இறைவனின் திருவடியாக பாவித்து, பூமாலையை அங்கேயே சமர்ப்பிக்கும்படி சொன்னார். மஞ்சுளா அப்படியே செய்தாள்.


மறு நாள் காலையில் மேல்சாந்தி, விக்கிரகத்தின் மீதுள்ள பூமாலைகளை அகற்றும்போது, ஒரு மாலையை மட்டும் கழற்ற முடியவில்லை.


அதைக் கண்ட  பூந்தானம், பக்தி பரவசத்துடன், ‘மஞ்சுளாவின் மாலை என்றால் அதுவும் விழட்டும்’ என்றார். உடனே மாலை கீழே விழுந்தது, அதனால், அந்த ஆலமரம் உள்ள இடம் பூஜைக்குரிய

தானது.


அதை ‘மஞ்சுளால் தரை’ என்பர். ஆண்டுதோறும் இங்கிருந்துதான் ‘யானை ஓட்டப் பந்தயம்’ துவங்குகிறது. ஆல மரத்தின் அடியில் பருந்து சிலை ஒன்றையும் தரிசிக்க

லாம்.


ஸ்ரீகுருவாயூரப்பன் கிழக்கு நோக்கி அருள்புரிவதால், இங்கு கிழக்கு வாசலே பிரதானம். கிழக்கு வாசல் வழியே மூன்றாம் கோபுரத்தைத் தாண்டிச் சென்றால், யானைப் பந்தல் என்ற பகுதியை அடையலாம்.


இதன் மேல் பகுதியில் புராண சம்பவங்களை விளக்கும் ஓவியங்களுடன் மகாத்மா காந்தியின் திரு உருவப்படமும் உள்ளது தனிச்சிறப்பு!


கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி அதைத் தொடாமல் இருக்கும் கட்டடங்களை ‘நாலம்பலம்’ என்பர்.உட்புறத்தில் உள்ள ‘அறத்து கெட்டுபடி’ என்ற இடத்தில் நாராயணீயம் இயற்றப்பட்டதாம்.


கருவறைக்கு எதிரில் உள்ள மேடை அருகே நின்றவாறு நாராயண பட்டத்திரி, கண்ணனிடம் பேசியவாறே நாராயணீயம் எழுதியதாகவும் சொல்லப்படுகிறது. இது மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

தொடரும்..கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரம் தரும் வரலட்சுமி 🙏வரம் தரும் வரலட்சுமி 🙏

யோகினி ஏகாதசி🙏🏼

புத்ரதா ஏகாதசி..(18.7.2020)