தர்மக்ஷேத்ரே..குருக்ஷேத்ரம்..5

 






குருக்ஷேத்ரத்தில் இன்னும் பல ஆலயங்கள் உள்ளன.

ஹர்ஷரின் மூதாதையரால் கட்டப்பட்ட ஸ்தானேஷ்
வரிலுள்ள மகாதேவ் ஆலய நீருக்கு குஷ்ட ரோகத்தை குணப்படுத்தும் சிறப்பு உண்டாம். கோவில் மிக அழகாக உள்ளது. பாண்டவர்கள் போருக்கு முன் இச்சிவபெருமானை வணங்கி ஆசி வேண்டிச் சென்றார்களாம்.

இங்குள்ள தீர்த்தங்களில் சூரிய கிரகண சமயம் நீராடுவது மிக விசேஷமாகக் கூறப்படுவது, சூரிய கிரகணத்துக்கும், பாரதப் போருக்கும் உள்ள சம்பந்தத்தால் மட்டுமல்ல; (அர்ச்சுனன் உயிரை சூரிய கிரகணத்தின் மூலம், சூரியன் அஸ்தமனமாகி விட்டதாக கவுரவர்களை எண்ண வைத்து கிருஷ்ணன் காப்பாற்றியது நாம் அறிந்ததே) அதற்கு பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ராமர் தனது தாய்மார்கள், சீதையுடன் வந்து பிரம்மசரோவரில் நீராடியதாக புராணம் கூறுகிறது.

கிருஷ்ணர் குருக்ஷேத்திரத்துக்கு சிறு வயது முதலே அடிக்கடி வருவாராம். துவாரகையிலிருந்து கண்ணனும், பலராமனும், கோகுலத்திலிருந்து நந்தகோபன், யசோதை, கோபியர்களும் இவ்விடத்தில் சந்திப்பார்களாம். ராதையும், கண்ணனும் சந்தித்து மகிழ்ந்தது குருக்ஷேத்திரத்தில் தானாம்.

1567-ல் பேரரசர் அக்பர் சூரிய கிரகணத்தின் போது குருக்ஷேத்திரம் வந்திருந்ததாக வரலாறு கூறுகிறது. இங்குள்ள கிருஷ்ணா மியூசியம், கீதா பவன் இவற்றில் கிருஷ்ணா மற்றும் முதல் நூற்றாண்டின் பகவத் கீதை பிரதி பற்றிய அனைத்து விவரங்களும், காண்பவர் ரசிக்கும் விதமாக அமைத்துள்ளனர். முக்கியமாக ராசலீலா, பூதனை வதம், பீஷ்மர் அம்புப் படுக்கை ஆகிய நிகழ்ச்சிகள் ஆளுயர பொம்மைகளாக சிறந்த கலையம்சத்துடன் உணர்ச்சி பாவங்களுடன் செய்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். டிசம்பரில் ‘கீதா ஜெயந்தி’ உற்சவம் மிக விமரிசையாக நடைபெறுகிறது.

நீதி:
மகாபாரதம் என்பது நம் ஒவ்வொருவருள்ளும் நடக்கும் ஒரு போர்.  நம்முள் இருக்கும் குறைகளையும்தீமைகளையும் உணர்ந்து கொண்டால்நம்முள் உறைந்திருக்கும் உள்ளுணர்வாகிய கண்ணனின் துணையுடன்நாம் நம்மை உயர்த்திக் கொள்ளும் வழியை உணர்ந்து மேன்மையடைவோம்🙏🏼
கடைசி பகுதி நாளை..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிறந்தவீடு (சிறுகதை)(27.2.'21)

Garden_to_table..1

குருவாயூருக்கு வாருங்கள்..9