குருவாயூருக்கு வாருங்கள்..6

 


இனி ஆலயத்தின் உள்ளிருக்கும் சிறப்பான இடங்களையும் குட்டிக் கண்ணனையும் தரிசிப்போம். கர்ப்பக்கிரகத்தின் வெளிப்புற மரச் சுவரில் உள்ள சட்டங்களில் சுமார் 3,000 பித்தளை அகல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.


இங்குள்ள ஆராட்டுக்குளம் எனப்படும் ருத்திர தீர்த்தம் சிறப்பு வாய்ந்தது. இக்குளத்தில் சிவபெருமான் ருத்ரனாக இருந்து மகாவிஷ்ணுவை போற்றி கடும் தவம் இருந்ததால் இந்த குளம் ருத்ர தீர்த்தம் என்று போற்றப்படுகிறது.


கோயிலின் தென்பக்கம் உள்ள வருண தீர்த்தம் எனப்படும் கிணற்றில் இருந்தே அபிஷேகத்துக்கான நீர்  எடுக்கப்படுகிறது. குருவும், வாயுவும் வருணனை பூஜித்ததை அடிப்படையாகக் கொண்டு இக்கிணற்றில் வருணனை ஆவாஹனம் செய்துள்ளதாக ஐதீகம். 


சுவாமி புறப்பாட்டின்போது பரிவார தேவதைகளுக்கு நடப்பது போன்றே இந்தக் கிணற்றுக்கும் பூஜை நடைபெறும். இதன் நீர் வற்றுவ தில்லை. இதற்குள் எண்ணற்ற சாளக்கிராமங்கள் இருப்பதாக நம்புகின்றனர். இதன் தீர்த்தம் நோய் அகற்றும் அருமருந்

தாகவும் விளங்குகிறது.


கருவறையில், அணையாமல் எரியும் நெய் விளக்கு ஒளியில் ஜோதியாக மின்னுகிறான் ஸ்ரீகுருவாயூரப்பன். குருவாயூரப்பனை, உன்னி (குழந்தை) கிருஷ்ணன் என்கிறார்கள் பக்தர்கள்.


மேலிரு கரங்களில் சங்கு, சக்கரமும், கீழிரு கைகளில் கதாயுதம், தாமரையும் கழுத்தில் துளசி, முத்து மாலைகள் தவழ, கிரீடம், மகர குண்டலம், கேயூரம், கங்கணம், உதர பந்தனத்துடன் வலப்புற மார்பில் ஸ்ரீவத்ஸம் என்ற சந்தனமும், வைஜயந்தி மாலையும், கௌஸ்துபமும் அணிந்து ‘ஸ்தானகம்’ எனும் நின்ற நிலையில் அருள் புரிகிறான் என்னப்பன்.


‘பாதாள அஞ்சனம்’ என்ற உயர் தர கல்லில் வடிவமைக்கப்

பட்ட இந்த விக்கிரகம் வைகுண்டத்தில் மகாவிஷ்ணு வால் உருவாக்கி வணங்கப்

பட்ட பின் பிரம்மன், கண்ணன் ஆகியோரால் பூஜிக்கப்பட்டது.  குருவாயூரப்பனது உற்சவர் விக்கிரகம் பொன்னால் ஆனது.


குங்குமப்பூ, கஸ்தூரி, கோரோசனை, அகோவனம், செஞ்சந்தனம் ஆகிய ஐவகைத் திரவியங்களை பன்னீரில் கலந்து அரைத்த நறுமணச் சந்தனத்தையே குருவாயூரப்பனுக்குப் பூசுகிறார்கள்.


விடியற்காலை கருவறை திறந்தவுடன், முன்தினம் சாத்தப்பட்ட சந்தனக் கலவையைக் கண்டு

களிக்கலாம். குருவாயூரப்

பனுக்கு நல்லெண்ணெயில் தைலாபிஷேகம் செய்யப்

படுகிறது. 


இந்த உஷத்கால பூஜையில் குருவாயூரப்பன் உற்சவ விக்ரகம், வெளிப் பிரகாரத்தை மூன்று முறை சுற்றிக் கொண்டு வரப்படுகிறது. அச்சமயம் பரிவார தேவதை

களுக்குச் செய்யப்படும் வழிபாடு ‘சீவேலி’ எனப்படும்.


அதிகாலையில் குருவாயூரப்பனை தரிசிப் போருக்கு கோயில் செக்கில் ஆட்டிய அபிஷேக எண்ணெயுடன் அபிஷேக தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. அபிஷேகத்தின்போது குழந்தை அழாமல் இருக்க கையில் வாழைப்பழம் தருவார்களாம்!


விக்கிரகத்தில் இருந்து அபிஷேக எண்ணெயை வாகை மரப் பட்டையால் ஆன கலவையால் அகற்றுவர். இதை வாகை சார்த்து என்பர். குருவாயூரப்பனை தரிசித்து விட்டு சுற்றி வரும்போது எண்ணை பிரசாதம் தரப்படுகிறது. அதிக எண்ணை வேண்டு

வோருக்கு அபிஷேக எண்ணையுடன் மேலும் எண்ணைசேர்த்து பாட்டில்

களில் விற்கப்படுகிறது. இதை எந்த இடத்தில் வலி ஏற்பட்டாலும் குருவாயூரப்

பனை வேண்டித் தடவினால் உடன் குணமாகுமாம்.

தொடரும்..



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சார்தாம் யாத்ரா..14

சார்தாம் யாத்ரா..9

சார்தாம் யாத்ரா..13