தர்மக்ஷேத்ரே..குருக்ஷேத்ரம்..6

 
பத்ரகாளி ஆலயம்
இங்குள்ள தேவிகூப் பத்ரகாளி ஆலயம் ஒரு சிறந்த சக்தி பீடமாகும். தட்ச யாகத்தின்போது, சிவன்
சுமந்து திரிந்த சக்தியின் உடலை மகாவிஷ்ணு தன் சக்கரத்தால் சிதைத்த போது, சக்தியின் வலது முழங்கால் பாகம் இங்குள்ள ஒரு கிணற்றில் விழுந்ததாம். அந்த இடமே அரியானாவின் ஒரே சக்தி பீடமாக விளங்கும் பத்ர காளி ஆலயம்.

அன்னை கருணைக் கண்களோடு, அண்டினாரை ஆட்கொள்ள ஆண்டாண்டு காலமாய் நின்று கொண்டிருக்கும் காட்சி கண்களை நிறைக்கிறது. அன்னையின் பாதம் விழுந்த கிணற்றை நன்கு பராமரித்து, அதன் மேல் ஒரு தாமரையைச் செய்து அன்னையின் பாதத்தை பளிங்கினால் செய்து வைத்துள்ளார்கள்.

மகாபாரதப் போரில் வெற்றி பெற்ற பின், காணிக்கை
யாக இங்கு தங்கக் குதிரை செய்து வைத்தாராம் கண்ணபிரான். கடவுளே வேண்டிக் கொள்ளும் போது சாமானியரான நாம் எம்மாத்திரம்? வேண்டிக் கொண்டவை நிறைவேறி
யதன் அடையாளமாக ஏகப்பட்ட மண் குதிரை பொம்மைகள் அணிவகுத்து நிற்கின்றன.

குட்டிக் கண்ணனுக்கு முடியிறக்கும் விழா இங்குதான் நடந்ததாம். கோவில் மிகச் சிறியதாகக் காணப்பட்டாலும் அற்புத சக்தி உள்ள ஆலயம்.

குருக்ஷேத்திரம் இந்துக்களுக்கு மட்டுமின்றி, சீக்கியர்களின் புனிதத் தலமாக விளங்கியதன் அடையாளமாக பல குருத்வாராக்களும், ஆசிரமங்களும் உள்ளன.

பேரரசர் ஷாஜஹானால் ஈரானைச் சேர்ந்த சாது ஷேக் சிலி என்பவரின் நினைவாக எழுப்பப் பட்டுள்ள ஷேக் சிலி முக்பாரா என்ற கோட்டை இங்கு அமைந்துள்ளது. வெண் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை மிக அழகாக இருப்பதுடன் அரசாங்கத்தால் நினைவுச் சின்னமாக, சுற்றுலா தலமாகப் பராமரிக்கப்
படுகிறது. இதனுள் ஷேக் சிலியின் சமாதி அமைந்
துள்ளது.

குருக்ஷேத்திராவிற்கு டெல்லி மற்றும் சண்டிகரிலிருந்து அரசுப் பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள் மற்றும் டாக்சியின் மூலம் செல்லலாம்.
நிறைவடைந்தது.

இதனை படித்து ரசித்து பாராட்டி எனக்கு ஊக்கம் தரும் தோழிகளுக்கு மனமார்ந்த நன்றி🙏🏼

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்புள்ள அப்பா 🙏🏼..11.6.'22

மேல்நாட்டு மருமகள்!

சார்தாம் யாத்ரா..9