குருவாயூருக்கு வாருங்கள்..7

 


குருவாயூரப்பனின் அழகு நம்மை மெய்மறக்கச் செய்கிறது. அவனை அப்படியே அள்ளி அணைத்து விடும் ஆசை ஏற்படுகிறது. சன்னிதியை விட்டு நகரவே மனமில்லை. வரிசை

யில் நின்று அனைவருக்கும் ஒரே மாதிரியான தரிசனம்.

சிறப்பு தரிசனம், தனிவரிசை எதுவும் இல்லை. முதியோர் வரிசை ஆலயத்தினுள் பிரகாரத்தில் காலை 8-10, மாலை 6-8  உண்டு.


உள்ளே பூஜிக்கும் அர்ச்சகர்கள் மனம் ஒன்றி அவர்கள் கடமையை செய்வது மனநிறைவு. அர்ச்சனைகள் செய்யப்படுவதில்லை என்பதால் யாரும் எவரிடமும் எதுவும் எதிர்பார்ப்பதில்லை. கர்ப்பகிரகத்தில் சந்தனம்,

அபிஷேகித்த பால் எதுவும் கொடுப்பதில்லை.


தரிசனம் செய்துவிட்டு வெளிவரும்போது அபிஷேகமான சந்தனமும்

காலை தைலாபிஷேகம் ஆனதும் தைலமும்,பாலும்  இலவச பிரசாதமாகத் தரப்படுகிறது. அத்தைலம் தீராத நோய்களையும்

தீர்க்க வல்லது. 


உன்னிகிருஷ்ணனுக்கு நிவேதித்த நெய்பாயசம், பால்பாயசம்,அப்பம்,அவல்,

அடை,களபம்,வெண்ணெய்,

திரிமதுரம்,சர்க்கரை பாயசம்,

அபிஷேக எண்ணெய் அனைத்தும் விற்பனை செய்யப் படுகிறது.


குருவாயூரப்பன் தினமும் 12 திவ்ய நாமங்களுடன் பக்தர்களை அனுக்கிரகிக்கிறார்.


நிர்மால்ய தரிசனம்–விசுவரூப தரிசனம்.. 

1.தைலாபிஷேகம் – வாத ரோகாக்னன்; 

2.வாகை சார்த்தல் – கோகுலநாதன்; 3.சங்காபிஷேகம் – சந்தான கோபாலன்;  

4.பால அலங்காரம் – கோபிகாநாதன்;  

5.பால் முதலிய அபிஷேகம் – யசோதா பாலன்; 6.நவகாபிஷேகம் – வனமாலா கிருஷ்ணன்; 

7.உச்சிகால பூஜை – சர்வாலங்கார பூஷணன்; 8.சாயங்கால பூஜை – சர்வமங்கள நாயகன்; 9.தீபாராதனை – மோகன சுந்தரன்;  

10.அத்தாழ (இரவு) பூஜை  – விருந்தாவனசரன்; .

11.திருப்பள்ளி பூஜை – சேஷசயனன்.

12. திருமஞ்சனம் -- உன்னிகிருஷ்ணன்


இங்குள்ள பூஜைமுறை ஆதிசங்கரரால் ஏற்படுத்தப்பட்டது.

அதிகாலை மூன்று மணிக்கு நாகசுரம் மற்றும் சங்கு முழங்க, குருவாயூரப்பனைத் திருப்பள்ளி எழச் செய்வர். இது நிர்மால்ய தரிசனம் என்று பெயர். அப்போது பகவானுக்கு முதல் நாள் அணிவித்திருந்த சந்தனக் காப்பு, ஆடை, ஆபரணங் கள், மாலைகள் ஆகியவற்றைக் களைவர். இத்தரிசனம் காண்பது பெரும் புண்ணியம்!


தொடர்ந்து விசுவரூப தரிசனம். அடுத்து தைலாபி ஷேகம். அதன் பிறகு திருமேனியை வாகைத் தூள் சாற்றி எண்ணெய் களைவர். பின்னர் சங்காபிஷேகம். அப்போது  புருஷ ஸூக்தம் சொல்வர். கடைசியில் தங்கக் கலச நீரால் பூர்ணத் திருமஞ்சனம். பிறகு நெற்பொரி, கதலிப் பழம், சர்க்கரை ஆகியவற்றை நைவேத்தியம் செய்வர். அப்போது பகவான், உன்னி கிருஷ்ணனாக காட்சியளிப்

பார்.


அடுத்து உஷத் பூஜையின்போது நெய்ப் பாயசமும், அன்னமும் பிரதான நைவேத்தியங்கள். மீண்டும் நடை திறக்கும்போது பகவான் திருமுடியில் மயிற்பீலி, நெற்றியில் திலகம், பொன் அரைஞாண், திருக்கரங்களில் ஓடக் குழல், மஞ்சள் பட்டு ஆகிய அலங்காரங்களுடன் அற்புதமாகக் காட்சி கொடுப்பார். இத்தனை பூஜைகளும் காலை ஆறு மணிக்குள் நடைபெறும்.


உச்சி பூஜையின்போது ‘சீவேலி’ உற்சவம் நடைபெறும். யானை மீது சீவேலி மூன்று முறை பிராகாரத்தை வலம் வருகிறது. அடுத்து ஒன்பது மணிக்கு வெள்ளிக் கலச தீர்த்தத்தால் பால் அபிஷேகம். 

இதை நவகாபிஷேகம் என்பர்.


இதைத் தொடர்ந்து பந்தீரடி பூஜை. இதை வேதம் ஓதும் நம்பூதிரிகள் செய்வர். சாதமும், 

சர்க்கரைப் பாயசமும் பிரதான நைவேத்தியங்கள். சுமார் 11:30 மணிக்கு நைவேத்தியம் பால் பாயசம். 12:30 முதல் 4:30 மணி வரை கோயில் நடை சாத்தப்படும்.


மாலை நடை திறந்ததும் சீவேலி. இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை. அப்போது நெய் அப்பம், இலை அடை, பால் பிரதமன் ஆகியவை நைவேத்தியங்கள். இதற்குப் பின் அத்தாழ சீவேலி. பிறகு சுற்று விளக்கு பிரார்த்தனை இருந்தால், ஆலயமெங்கும் விளக்குகள் எரிய, பஞ்ச வாத்தியங்கள் முழங்க, மூன்று அல்லது ஐந்து யானைகளுடன் பக்தர்களும் வலம் வருவர்.


குருவாயூர் கோயிலில் சாயங்காலம் மட்டுமே தீபாராதனை. ஏழு அடுக்கு விளக்கு, ஐந்து திரி, நாகப்பட விளக்கு, ஒற்றைத் திரி விளக்கு என்று பல விளக்குகளை ஏற்றி ஆராதிக்கிறார்கள். இறுதியில் கற்பூர ஆரத்தி. அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் ஸ்ரீகுருவாயூரப்பனை வழிபடுவதாக ஐதீகம்.

தொடரும்...



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிறந்தவீடு (சிறுகதை)(27.2.'21)

Garden_to_table..1

குருவாயூருக்கு வாருங்கள்..9