குருவாயூருக்கு வாருங்கள்..9

 


குருவாயூரில் கண்ணன் நடத்திய திருவிளையாடல்கள்...

மேல்பத்தூர் நாராயண பட்டதிரி தன் குருவின் வாதநோயைத் தான் பெற்றுக் கொண்டு குருவா

யூரப்பனின் முன்பு அமர்ந்து தினமும் பாகவதத்தை ஆதாரமாகக் கொண்டு நாராயணீயம் பாட, அழகுக்கண்ணன் 

தலையசைத்து ஆமோதிக்க 

அவரது நோயும் தீர்ந்தது. நமக்கு நாராயணீயம் என்ற அற்புதப் பொக்கிஷம் கிடைத்தது🙏🏼


குருவாயூரைச் சுற்றியுள்ள ஊர்களில் எழுத்தச்சன், பட்டத்திரி, லீலாசுகர், பூந்தானம் ஆகிய மகான்களும் கவிஞர்களும் வாழ்ந்திருந்தனர்.


மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி, பக்த சிரோன்மணி வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் மகாவிஷ்ணுவாகவும் பூந்தானம், வில்வமங்களம், மானதேவன் குருர் அம்மா ஆகியோர் பாலகிருஷ்ணனா கவும் ஸ்ரீகுருவாயூரப்பனை வழிபட்டனர்.


இறைவனே விருப்பப்பட்ட இளநீர் அபிஷேகம் இவ்வாலயத்தில் ஆராட்டு நாளன்று நடக்கிறது. அதற்கான இளநீர் காய்களை இழவ சமூகத்தைச் சேர்ந்த தம்புரான் படிகள் குடும்பத்தினரே இன்றுவரை அளித்து வருகின்றனர்.


முந்தைய நாட்களில் அந்த சமூகத்தினருக்கு ஆலயத்தில் நுழைய அனுமதி இல்லை. ஆராட்டு நாளன்று ஆலய அர்ச்சகர் ஒருவர் கிட்டை என்ற தென்னை மரமேறியிடம் சுவாமிக்கு இளநீர் அபிஷேகத்திற்கு சில தேங்காய்களைக் கேட்டார். கிட்டை அவரது வேலையில் கவனமாக இருந்ததால் இவரை கவனிக்கவில்லை.

அர்ச்சகர் சிறிது நேரம் நின்றுவிட்டு திரும்பிவிட்டார். 


அப்பொழுது திடீரென்று தேங்காய்கள் மடமடவென்று கீழே விழ, பயந்த கிட்டை அவற்றை எடுத்துக்கொண்டு ஆலயம் சென்று நடந்ததை சொன்னபோது, அர்ச்சகர் எவரும் அவர் இருப்பிடம் செல்லவில்லை எனத் தெரிய வந்தது. கிருஷ்ணனே இளநீர் அபிஷேகத்திற்கு ஆசைப்பட்டு நிகழ்த்திய  இந்த சம்பவத்தை உணர்ந்தனர். அதுமுதல் ஆராட்டு நாளன்று இளநீர் அபிஷேகம் செய்யும் வழக்கம் ஆரம்பமானது.


பூந்தானம் நம்பூதிரி குருவாயூரப்பனிடம் மிக ஆழ்ந்த பக்தி உடையவர்.மிக எளிமையாக எழுதுபவர். அவர் தான் எழுதிய ஞானப்

பானையை படித்து தவறு இருப்பின் சரி செய்யும்படி பட்டதிரியிடம் கேட்டார். அவரது திறமையைப் பற்றி ஏளனமாகப் பேசிய பட்டதிரி மறுத்துவிட்டார். மனம் வருந்திய பூந்தானம் கண்ணனிடம் இது பற்றி முறையிட்டார்.


அன்றிரவு வழக்கம் போல் நாராயணீயத்தை பட்டதிரி படித்தபோது அவர் அருகில் வந்து அமர்ந்த சிறுவன் ஒருவன் 'முதல் சுலோகத்தில் ஒரு தவறு.. இரண்டாவதில் இரண்டு தவறு..மூன்றாவதில் மூன்று தவறு' என்று சொல்லிக் கொண்டே போக, வந்திருப்

பவன் பாலகிருஷ்ணன் என்றுணர்ந்த பட்டதிரி, உடன் பூந்தானத்திடம் சென்று மன்னிப்பு கேட்டு அவரது ஞானப்பானையை படித்து அதில் எந்தத் தவறும் இல்லாததை ஒப்புக் கொண்டார். 


நாராயண பட்டத்திரி சம்ஸ்கிருதத்தில் எழுதிய நாராயணீயம், பூந்தானம் என்ற மகான் மலையாளத்தில் எழுதிய ஞானப்பானை ஆகிய நூல்கள் ஸ்ரீகுருவாயூரப்பனது மகிமைகளை படிக்கப் படிக்க திகட்டுமாறு எடுத்துரைக்கின்றன.

மற்றொருமுறை விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் வரும்...பத்மநாப அமரப்ரபு...என்பதை ..பத்மநாபோ மரப்ரபு...மரங்களின் கடவுள் என்ற பொருளில் படிக்க, பட்டதிரி ஏளனமாக சிரித்தபடி...நீ சொல்வது தவறு. அது மரப்ரபு அல்ல,  அமரப்ரபு...என்று சொல்ல..கருவறையிலிருந்து குருவாயூரப்பன்...நான் மரப்ரபுதான்..என்று சொன்னார். 

பட்டதிரியை விட பூந்தானத்தின் பக்தியை இறைவன் அதிகம் விரும்பினார் என்பதை பட்டதிரி அறியவே இந்தத் திருவிளையாடல்! இந்த சம்பவத்தை உணர்த்தும் விதமாக டெர்ரகோட்டாவினால் செய்யப் பட்ட  உயரமான மரப்ரபு சிலை ஶ்ரீவல்ஸம் கெஸ்ட் ஹவுஸில் நிறுவப்பட்டுள்ளது. 

50 வருடங்களுக்கு மேல் ஐயனைச் சுமந்த கிரிராஜன் கேசவன் என்ற யானை. 1922 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதி கேசவன் குருவாயூருக்கு வந்தபோது அதன் வயது பத்து. 54 ஆண்டுகள் தினமும் குருவாயூரப்பனை சீவேலி நேரத்தில் சுமந்து வந்த யானை இது.

குருவாயூர் கோயிலில் தீவிபத்து ஏற்பட்டபோது கேசவன் யானை கோயில் மணியை அடித்து ஊர் மக்களைக் கூட்டி தீயை அணைக்கச் செய்தது.

கேசவன் ஒருபோதும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில்லை. 1973ல் கேசவனுக்கு ஆலய நிர்வாகம் ‘கஜராஜன்’ பட்டம் வழங்கியது.

1976 டிசம்பர் 2ஆம் நாள் குருவாயூர் ஏகாதசி அன்று 72 வயதான கேசவன், இறைவனை தரிசித்தபடி அதன் தும்பிக்கை சந்நிதியை நோக்கியவாறே உயிர் துறந்தது. அதன் நினைவாக ‘பஞ்ச ஜன்யம்’ தங்குமிடம் அருகில் 12 அடி உயர கான்கிரீட் சிலை நிறுவப்பட்டது.

வில்வமங்கலம் சுவாமிகளுக்கும், குருரம்மைக்கும் மட்டுமே  கிருஷ்ணன் பல வடிவங்களிலும் காட்சி கொடுத்திருக்கிறார். வில்வமங்கலம் ஒருநாள் கருவறையுள் கண்ணனைத் தேட  அந்த உன்னிகிருஷ்ணனோ கால்களில் சலங்கையுடன் சுட்டம்பலம் என்ற வடக்கு பிரகாரத்தில் நடனமாடிக் கொண்டிருந் தாராம்! அதுமுதல் அவ்விடம்  'நிருத்தம்' என அழைக்கப் பட்டது. வில்வமங்கலம் தியானத்தில் இருக்கும்போதும் தனை மறந்து கண்ணனைப் பாடிக்கொண்டு ஆடும்போதும் பலமுறை கண்ணன் தரிசனம் கொடுத்ததுண்டாம்.

மற்றொரு முறை கண்ணனைக் காணாமல் தேட அவனோ கிழக்குநடையில் கிருஷ்ணனாட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தானாம். இப்படி அடிக்கடி கருவறையை விட்டு ஓடிவிடுவதால் அதுமுதல் கிருஷ்ணனாட்டம் கருவறை பூஜைகள் முடித்து மூடப்பட்டபின்பே நடக்க ஆரம்பித்ததாம்!

குருரம்மாவுக்கு குழந்தை வடிவில் வந்து வேலைகளைச் செய்து கொடுத்தும், குறும்புகள் செய்தும், அவர் அடித்தபோது சிரித்து மகிழ்ந்தும், ஒரு மகனைப்போல் அவளுக்கு வேலைகளை செய்து கொண்டும் அந்த பாலகிருஷ்ணன் லீலைகள் புரிந்தானாம்!

ஒரு விவசாயி தன் தென்னந்தோப்பில் இருக்கும் மரங்களின் முதல் காயை குருவாயூரப்பனுக்கு அர்ப்பணிப்பதாக வேண்டிக்கொண்டான். தேங்காய் மூட்டைகளுடன் குருவாயூர் வரும் வழியில் திருடன் ஒருவன் வழிமறித்தான்.

...இவை குருவாயூரப்பனுக்கு காணிக்கை...

என விவசாயி சொல்லியும் கேட்காத திருடன் ...இந்தத் தேங்காய்க்கென்ன கொம்பா முளைத்திருக்கு...என்றபடி மூட்டையைப் பிரிக்க அத்தனை தேங்காயும் கொம்புகளோடு இருந்ததாம்! இதன் சாட்சியாக இன்றும் ஆலயத்தில் ஒரு கொம்புத் தேங்காய் பக்தர்களின் பார்வைக்காக உள்ளது.

ஒரு சிறுவன் பசி பொறுக்க முடியாமல் ஒரு கடையிலிருந்து வாழைப்பழத்தை திருடி விட்டான். குருவாயூரப்பனின் பக்தனான அவன் கோவில் உண்டியலில் பாதி பழத்தைப் போட்டுவிட்டு மீதியை தான் சாப்பிட்டுவிட்டான். இது தெரிந்த கடைக்காரன் அவனுக்கு தண்டனை கொடுக்க எண்ணி, ஆலயத்தை சில சுற்றுகள் சுற்றச் சொன்னான். அச்சமயம் அந்தப் பையனின் பின்னாலேயே குருவாயூரப்பன் சுற்றுவதைக் கண்டு பதறிவிட்டான். அன்றிரவு அவன் கனவில் தோன்றிய கண்ணன்...பாதி பழத்தை நானும் சாப்பிட்டதால் ஆலயத்தை சுற்றி வந்தேன்..என்றார்!

லீலைகள் தொடரும்..



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

WTWFriendship

சார்தாம் யாத்ரா..14

சார்தாம் யாத்ரா..9