வரம் தரும் வரலட்சுமி 🙏வரம் தரும் வரலட்சுமி 🙏

 





#wtwstories2021
#wtwகதைஎழுது
#August1

வரம் தரும் வரலட்சுமி 🙏

பத்மா, பவானி, தனு மூவரும் சிவகாமி வீட்டு வரலக்ஷ்மி நோன்பிற்கு செல்லக் கிளம்பினார்கள். ஒவ்வொரு ஆண்டும் சிவகாமி வீட்டு வரலக்ஷ்மி நோன்பைக் காண கண் கோடி வேண்டும். விதவிதமான பூக்களும் பழங்களும் வைத்து அவள் செய்யும் பூஜைக்கு அத்தனை தோழிகளையும் கூப்பிடுவாள்.
இந்த முறை பவானி, தனு, பத்மாவுடன் நானும் இணைந்து கொண்டேன்.

பத்மா தன் வீட்டு தேங்காய்களைக் கொண்டு வந்தாள். தனு அவள் வீட்டு சிவப்பு ரோஜாக்களையும், பவானி மஞ்சள் ரோஜாக்களும் பூஜைக்கென கொண்டுவர, நான் என் வீட்டு ரோஜா, மல்லி, நித்யமுல்லை, அரளி பூக்களுடன் பூஜைக்கு சென்றோம்.

செல்லும்போது அந்த விரதம் பற்றி பேசிக் கொண்டு சென்றோம். இந்த விரதம் ஏன் செய்கிறோம் முதலில் செய்தது யார் என்று பவானி விளக்கமாகக் கூறினாள்.

'நாம் விரதமிருக்கும் வரலக்ஷ்மி யாலேயே சொல்லப்பட்ட விரதம் தான் இது.  அதோடு அவளையே உருவாக்கி தன் முன் வைத்து விரதம் அனுசரிப்பதும் இதில் விசேஷம்', என்று நான் சொல்ல தோழிகள் கதையைக் கேட்க ஆர்வமானார்கள்.

மகத தேசத்தில் குண்டினபுரத்தில் வாழ்ந்த  சாருமதிக்கு திருமணமானதும் புகுந்த வீட்டு பழக்க வழக்கங்களை முறைப்படி கடைப்பிடிப்பதோடு பெரியவர்களுக்கு மரியாதையும் கொடுத்து இறைபக்தியிலும் குறையாமல் சிறப்பாக வாழ்ந்தாள்.

மகாலட்சுமியே சாருமதியைப் பார்த்து வியந்து அவள் கனவில் தோன்றி  இந்த வரலட்சுமி விரதம் பற்றி சொன்னதுடன், இந்த நாளில் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்கும் வீட்டில் தான் நிலையாகத் தங்குவதாகவும், தன் அருள் பூரணமாக கிடைக்கும் என்றும் கூறியதோடு, இந்த விரதத்தை கடைப்பிடித்தாலும், விரத முறையை மற்றவருக்கு சொன்னாலும் புண்ணியம் கிடைக்கும் என்றாள்.

பத்மா...இந்த நோன்பை எல்லோரும் செய்வதில்லை. சிலருக்கு மட்டுமே உண்டு...என்று சொல்ல நான் எங்கள் வீட்டிலும் இந்த நோன்பு செய்யும் வழக்கமில்லை என்றேன்.

...சிவபெருமானின் உபதேசப்படி, மகாலட்சுமியை வழிபட்டு பார்வதி இந்த வரலட்சுமி விரதம் இருந்ததாலேயே முருகன் அவதாரம் நிகழ்ந்தது என புராணங்கள் கூறுகின்றன...என்றாள் தனு.

...இந்த நோன்பு பற்றி பல கதைகள் இருக்கிறது. சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் தேவர்ளுக்கு நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை தவறாக தீர்ப்பு கூற குஷ்டரோகியாகும் சாபம் பெற்றாள். சாபவிமோசனம் கேட்டு பார்வதி காலில்விழுந்து வணங்கியபோது 'வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் 'என அருள் செய்தாள். உடனே சித்திரநேமி பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள். புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும். இன்று இந்த விரதத்தில் பங்கு பெறுவதும் நமக்கு நல்ல பலன்களைத் தரும்...என்றேன் நான்.

...சீக்கிரமாகப் போய் சிவகாமிக்கு கொழுக்கட்டை செய்ய உதவி செய்வோம்...என்றபடியே நாங்கள் ஓலாவில் ஏறி சிவகாமி வீட்டுக்கு சென்றோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிறந்தவீடு (சிறுகதை)(27.2.'21)

Garden_to_table..1

குருவாயூருக்கு வாருங்கள்..9