யோகினி ஏகாதசி🙏🏼

 





இன்று யோகினி ஏகாதசி. ஆடி மாதத்து  தேய்பிறை ஏகாதசிக்கு ‘யோகினி’ என்று பெயர். குஷ்ட ரோகத்தை நீக்கும் ஏகாதசி இது.யோகினி ஏகாதசி விரதம் வாழ்க்கையில் செல்வத்தையும் மகிழ்ச்சி

யையும் தருகிறது. அக நோய் மட்டுமல்லாமல் உடல் நோயையும் போக்கும் யோகினி ஏகாதசியின் பெருமையை விளக்கும்  புராண சம்பவம் இது.


குபேரன் சிவபூஜை செய்யும்போது, அவனுக்குப் பூக்களைக் கொண்டு வரும் வேலையை ஹேமமாலி என்பவன் செய்து வந்தான். மனைவியிடம் மிகுந்த அன்பு கொண்ட ஹேமமாலி ஒரு நாள், மனைவியுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்ததால், குபேரனின் பூஜைக்குப் பூக்களைக் கொண்டு போகவில்லை.


பூஜையின்போது பூக்கள் இல்லாததைக் கண்ட குபேரன் கோபத்தில்  "தவறு செய்த ஹேமமாலிக்குப் பதினெட்டு விதமான குஷ்ட ரோகங்கள் வரட்டும்" என்று சபித்தான்.


ஹேமமாலியைக் குஷ்ட ரோகம் பீடித்தது. அவன் மனைவி விசாலாட்சி உள்ளம் உடைந்தாள். கணவன் மனைவி இருவருமாக மேரு மலைக்குப் போய், அங்கே தவம் செய்து கொண்டிருந்த மார்க்கண்டேயரின் திருவடிகளில் வீழ்ந்தார்கள்.


அவர் "யோகினி ஏகாதசி''யை அவர்களுக்கு உபதேசித்தார். அதன்படியே விரதம் இருந்து மகாவிஷ்ணுவை பூஜித்த ஹேமமாலி நோய் நீங்க பெற்றான். குபேரபுரிக்கே திரும்பினான்.


யோகினி ஏகாதசி விரத உபவாசம், எண்பத்தெட்டு ஆயிரம் பிராமணர்களுக்கு போஜனம் செய்வித்த புண்ணியத்தை வழங்கும் சக்தி பெற்றது. 


ஏகாதசி நாட்களில் விரதமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி மகாவிஷ்ணுவை பிரார்த்தனை செய்தால் மங்கல காரியங்கள் நடந்தேறும். சகல ஐஸ்வரியங்களையும் தந்தருள்வார்; இல்லத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்ய அருளுவார் திருமால்.

ஓம் நமோ நாராயணா 🙏🏼



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சார்தாம் யாத்ரா..14

சார்தாம் யாத்ரா..9

சார்தாம் யாத்ரா..13