இடுகைகள்

அப்பாவுக்கு வணக்கம்🙏🏻..19.6.'22.

 #wtwstories2022 #fathersday #wtwகதைஎழுது அப்பாவுக்கு வணக்கம்🙏🏻 இந்தத் தந்தையர் தினத்தில் என் பிரியமுள்ள அப்பாவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களைக் கூறிக் கொள்கிறேன்.🙏 ஒரு தந்தையைப் பற்றிய எண்ணங்கள்... 6 வயதில் ... 'என் அப்பாவைப் போல கிடையாதாக்கும். அவர்தான் உலகமே...' 8 வயதில் ... 'என் அப்பாவுக்கு தெரியாதது எதுவும் இல்லை.அவருக்கு ஈடு இணை யாருமில்லை..' 10 வயதில்... 'என் அப்பா நல்லவர்தான்...ஆனாலும் அடிக்கடி கோபிக்கிறார்...' 15 வயதில்... 'என் சின்ன வயதில் அப்பா என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார்.இப்போ மாறிவிட்டார்..' 18 வயதில் ... 'இந்த நாளைக்கு ஏற்ற மாதிரி என் அப்பாவுக்கு நடந்து கொள்ளத் தெரியவில்லை. சரியான பழம்பஞ்சாங்கம்!...' 20 வயதில்... 'என் அப்பா ரொம்பவே மோசமாகிவிட்டார். எதையும் புரிந்து கொள்வதில்லை...' 23 வயதில்... 'சே!  அப்பாவின் செயல்,பேச்சு எதுவும் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அம்மா எப்படித்தான் இவருடன் இத்தனை நாளாக வாழ்கிறாளோ?' 25 வயதில்... 'வர வர அப்பாவுக்கு மூளையே சரியில்லையோ என்று தோன்றுகிறது. எது சொன்னாலும் எதிர்...

அன்புள்ள அப்பா 🙏🏼..11.6.'22

 #wtwstories2022 #fathersday #wtwகதைஎழுது அன்புள்ள அப்பா 🙏🏼 அப்பா என்றதும் மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது? அப்பா-மகள் உறவு சற்று ஆழமானது... வித்யாசமான பாசம் கொண்டது!  இந்த வார்த்தையை சொல்லும்போதே மனம் சிலிர்க்கிறது..கண்கள் குளமாகிறது..!  முதல் குழந்தை பெண்தான் வேண்டும் என்று என் அப்பா ஆசைப்பட்டு பிறந்தவளாம் நான் என்று என் அம்மா சொல்வார். எனக்கு கீழே மூன்று தம்பிகள் இருந்தாலும் என் மீது ஒரு தனி பாசம் என் அப்பாவுக்கு என்பதை நான் பலமுறை உணர்ந்ததுண்டு. என் இரண்டு வயதிலிருந்தே மாலையில்  அலுவலகத்தி லிருந்து அப்பா எப்பொழுது வருவார் என்று வாசலிலேயே காத்திருப்பேனாம். அப்பாவும் பிஸ்கட் சாக்லேட் என்று ஏதாவது வாங்கி வருவாராம். அப்பா வந்ததும் அன்று நடந்ததெல்லாம் அவரிடம் சொல்லிவிட்டே அவரை உடை மாற்ற விடுவேனாம்! நான்கு வயது வரை வெளியில் சென்றால் அப்பாவை என்னைத் தூக்கி வரச் சொல்லி அடம் செய்வேனாம்!  நான் படிக்கும் நாட்களில் எனக்கு கணக்கில் சந்தேகம் வந்தால்(எனக்கு கணக்கு வராத பாடம்!) பொறுமையாக சொல்லித் தருவார். எனக்கு கல்லூரி சென்று படிக்க ஆசை இருந்தும் அப்பாவிற்கு இஷ்டமில...

அம்மாவுக்கு அர்ப்பணம்🙏🏻..8.3.'22

படம்
 அம்மாவுக்கு அர்ப்பணம்🙏🏻 அன்னையர் தினத்தில் என் அம்மாவின் நினைவுகள் கடிதமாக... அன்புள்ள அம்மா அநேக நமஸ்காரம். நலம்.நலமறிய அவா. இங்கு நான் உன் மாப்பிள்ளை பேரன் பேத்திகள் கொள்ளு பேரன் பேத்திகள் எல்லாரும் நலம்.நீ எப்படி இருக்கிறாய்? ஏன்மா..அப்பாவை விட்டு எந்த இடமும் போகாத நீ சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டாயே? பாவம்..அப்பா நீயில்லாமல் எட்டு வருடம் ரொம்பவே கஷ்டப்பட்டார். அப்பா வந்ததும் இப்போ சந்தோஷமாக இருப்பாயே! நான்  உன்னிடம் நேரில் பேச முடியாத விஷயங்களை இந்த கடிதத்தில் எழுதுகிறேன். நான் குழந்தையாய் இருந்தபோது சாப்பிட ரொம்ப படுத்துவேன் என்பாயே? உன் வேலை யெல்லாம் விட்டு எனக்கு சாதம் ஊட்டுவதற்குள் எவ்வளவு கஷ்டப்பட்டாயோ? இரவில் உன் புடவையைப் பிடித்துக் கொண்டு தூங்கும்போது தூக்கம் வராமல் அந்தப் புடவையை வாயில் கடித்து கிழித்து விடுவேன் என்று சொல்லியிருக்கிறாய். உனக்கு ரொம்பப் பிடித்து வாங்கிக் கொண்ட பட்டுப் புடவையை நான் கிழித்த போது ரொம்ப வருத்தப் பட்டாய் என்று சித்தி சொன்னார். நான் எவ்வளவு கஷ்டப் படுத்திருக்கேன் உன்னை. நிற்க..எனக்கு வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்தையும் காரணத்தோடு சொல்ல...

கல்யாணமே..வைபோகமே!

படம்
  கல்யாணம் என்றாலே அனைவருள்ளும் ஒரு மகிழ்ச்சி பெருகுவதை உணர முடியும். அது இளவயது திருமணமோ.. அறுபதாம் கல்யாணமோ.. பீமரதசாந்தியோ..சதாபிஷேகமோ...அதன் சந்தோஷம் தனிதான்! அதனை அந்த தம்பதிகள் மட்டுமன்றி அதனைக் காண வந்த அனைவரும் அனுபவிக்கலாம்!  அக்டோபர் 17ம் தேதி ஏகாதச ருத்ரஜபம், ஹோமமும் ,18ம் தேதி  எங்கள் பீமரத சாந்தியும்  (எழுபது வயது நிறைவு) நடைபெற்றது.  இதற்காக வந்திருந்த உறவினர்கள்  ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக பேசுவதும், சிரிப்பதும், ஜோக்கடிப்பதுமாக இருந்தபோது, உறவுகள் ஒருவருக்கொருவர் இணைந்து வாழவே இது போன்ற சம்பிரதாயங்களை நம் முன்னோர் வைத்திருப்பார்கள் போலும் என்று தோன்றுகிறது! நவராத்திரி முடிந்ததும் பீமரதசாந்தி இருந்ததால் வேலை மிக அதிகம். அதனாலேயே நான் அதிகம் எழுத முடியவில்லை. இத்துடன் சில புகைப்படங்களை இணைத்துள்ளேன். வயதில் பெரியவர்களுக்கு என் நமஸ்காரமும், இளையவர்களுக்கு வாழ்த்துக்களும்.

கணபதியே வருவாய்🙏🏼

படம்
 கணபதியே வருவாய்🙏🏼 நாளை  பிள்ளையார் சதுர்த்தி. பிள்ளையாருக்கு பல ஆலயங்கள் நம் நாடெங்கும் இருந்தாலும் மகாராஷ்டிரா அவருக்கு மிகப் பிடித்த இடம் என்று தோன்றும்படி பலப்பல ஆலயங்கள்..ஒவ்வொன்றும் தனித்தனி சிறப்பு. அவை பற்றி எழுத எண்ணியி ருந்தேன். நேரம் இல்லையாதலால் முடியவில்லை. இன்று தரிசிப்போம் மும்பை தாதரிலுள்ள முதல் தெய்வம் சித்தி வினாயகரை. ஸ்ரீகணபதி செல்வம் கொழிக்கும் மஹாராஷ்டிரத்தின் முதல் முக்கிய கடவுள். ஆவணி மாதம் வரும் விநாயக சதுர்த்தி இங்கு மிக மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். வீடுகளில் ஐந்து நாட்களும், ஆலயங்களில் பத்து நாட்களும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். கடைசி நாளன்று ‘கணபதி பப்பா மோரியா’ என்று விண்முட்டும் கோஷத்துடன் விசர்ஜன் செய்தபின் ஊரே மிக அமைதியாகி விட்டதான உணர்வு தோன்றும். மொத்தத்தில் இவ்வூர் மக்களின் செல்லப் பிள்ளையாக பிள்ளையார் விளங்குகிறார். இங்குள்ள விநாயகர் ஆலயங்கள் எண்ணிலடங்கா. ஒவ்வொன்றும் புகழும் பெருமையும், பிரசித்தமும் உடையவை. ‘அஷ்ட விநாயகத் தலங்கள்’ மிக முக்கியமானவை. மும்பை மற்றும் மும்பையைச் சுற்றியுள்ள பல விநாயகர் ஆலயங்களுக்கும் சிகரமாக விளங்குவது பிரப...

கீதை எனும் புண்ணிய நூல்🙏🏼

படம்
  குருக்ஷேத்திரம் பற்றி எழுதிவிட்டு கீதை பற்றி எழுதாமல் முழுமை அடையாது. இறைவனின் திருஅவதாரங்கள், மஹான்கள் தோன்றிய தினத்தையே 'ஜெயந்தி'யாகக் கொண்டாடுவது போல் பகவத்கீதைக்கு மட்டுமே ஜெயந்தி தினம் கொண்டாடப்படுகிறது. 26 வகையான கீதைகள் இருந்தாலும், உண்மையில், 'கீதை' என்னும் சொல், 'பகவத் கீதை'யையே குறிக்கிறது. முதன் முதலில் கீதை உபதேசிக்கப்பட்டது சூரியபகவானுக்கே. காலப் போக்கில், இதன் கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால், மீண்டும்  இதை அர்ஜூனனுக்கு உபதேசிப்பதாக, ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவே கூறுகிறார். கடலெனத் திரண்டிருக்கும் படைவீரர்களின் நடுவில், பார்த்தனுக்கு பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட தினமே 'கீதா ஜெயந்தி'. பார்த்த சாரதியான ஸ்ரீகிருஷ்ணர், மன்னுயிர்கள், வாழ்வென்னும் ரத யாத்திரையை வெற்றிகரமாக நிறைவேற்றி, தம்மை வந்து அடையும் பொருட்டு உபதேசித்ததே 'பகவத் கீதை' கீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை: ஸாஸ்த்ரஸங்க் ரஹை: வேதங்கள் கூறும் தத்துவங்களின் சாரமே பகவத் கீதை. கீதையின் பெருமையை விளக்க, வார்த்தைகளே இல்லை.  இந்த  தத்துவநூல், இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநா...

கோகுலாஷ்டமி ஸ்பெஷல்..

படம்
  தினமும் கிருஷ்ண ஜயந்திதான்! ஸ்ரீமத் பாகவத ரஹஸ்யம் படித்துக் கொண்டிருந்த போது அதில் கிருஷ்ண ஜயந்தியைப் பற்றிய பாகம் மிக அருமையாக இருந்தது. பாகவத ரகஸ்யம் படிக்கப் படிக்க திகட்டாத தேன்! ஒவ்வொரு வரியிலும் பக்தி ரஸம் ததும்புகிறது.  நான் பெற்ற இன்பம் அனைவரும்பெறும் ஆசையில் அதில் சிலவற்றைத் தொகுத்து எழுதியுள்ளேன். நந்த மஹோத்சவம் மகிழ்ச்சி விழா. தினமும் கொண்டாட வேண்டும். ஜனங்கள் வருஷத்தில் ஒரே நாள்தான், ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அதிகாலை 4 மணி முதல் 5½ மணி வரை தினமுமே நந்த மஹோத்சவம், பாலகிருஷ்ணன் பிறந்த தினம் கொண்டாடுங்கள். பகவான் எழுந்தருளும் தினமே விழா நாளாகும். விழாவிற்குப் பணம், காசு தேவையில்லை. அதற்கு அன்பே முக்கியம். கிருஷ்ண ஜயந்தியை ஆலயங்களில் கொண்டாடினால் போதாது. நம் ஒவ்வொருவர் வீடுகளிலும் விழா கொண்டாட வேண்டும். ஜீவாத்மாவின் இருப்பிடம் நம் சரீரமேயாகும். ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி கொண்டாடுவது என்றால் அப்பம், வடை, அவல் வெண்ணெய் விநியோகிப்பதல்ல. தயிரும், பாலும் கொடுப்பதா? இதெல்லாம் வேண்டுமென்பதில்லை. விழாவை மனதில் (இதயத்தில்) கொண்டாட வேண்டும். மனிதன் தன் உடல் உணர்...