கீதை எனும் புண்ணிய நூல்🙏🏼
குருக்ஷேத்திரம் பற்றி எழுதிவிட்டு கீதை பற்றி எழுதாமல் முழுமை அடையாது. இறைவனின் திருஅவதாரங்கள், மஹான்கள் தோன்றிய தினத்தையே 'ஜெயந்தி'யாகக் கொண்டாடுவது போல் பகவத்கீதைக்கு மட்டுமே ஜெயந்தி தினம் கொண்டாடப்படுகிறது. 26 வகையான கீதைகள் இருந்தாலும், உண்மையில், 'கீதை' என்னும் சொல், 'பகவத் கீதை'யையே குறிக்கிறது. முதன் முதலில் கீதை உபதேசிக்கப்பட்டது சூரியபகவானுக்கே. காலப் போக்கில், இதன் கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால், மீண்டும் இதை அர்ஜூனனுக்கு உபதேசிப்பதாக, ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவே கூறுகிறார். கடலெனத் திரண்டிருக்கும் படைவீரர்களின் நடுவில், பார்த்தனுக்கு பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட தினமே 'கீதா ஜெயந்தி'. பார்த்த சாரதியான ஸ்ரீகிருஷ்ணர், மன்னுயிர்கள், வாழ்வென்னும் ரத யாத்திரையை வெற்றிகரமாக நிறைவேற்றி, தம்மை வந்து அடையும் பொருட்டு உபதேசித்ததே 'பகவத் கீதை' கீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை: ஸாஸ்த்ரஸங்க் ரஹை: வேதங்கள் கூறும் தத்துவங்களின் சாரமே பகவத் கீதை. கீதையின் பெருமையை விளக்க, வார்த்தைகளே இல்லை. இந்த தத்துவநூல், இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநா...